Santhosam Ponguthey - சந்தோஷம் பொங்குதே - Christking - Lyrics

Santhosam Ponguthey - சந்தோஷம் பொங்குதே

சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா இயேசு என்னை
இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் என்னில் பொங்குதே

வழி தப்பி நான் திரிந்தேன்
பாவப் பழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்பு குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாரம் நீங்கிற்றே

சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன்
வருவான் ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து ரட்சிப்பார் அந்த நல்ல
இயேசு எந்தன் சொந்தமானாரே

பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில்
அழிந்திடுவார் நானோ பரலோகத்தில்
நாளும் பாடல் பாடிடுவேன் என்னில்
வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்
Santhosam Ponguthey - சந்தோஷம் பொங்குதே Santhosam Ponguthey - சந்தோஷம் பொங்குதே Reviewed by Christking on May 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.