Saranam Nambinaen Yesu - சரணம் நம்பினேன் யேசு - Christking - Lyrics

    Saranam Nambinaen Yesu - சரணம் நம்பினேன் யேசு

    சரணம் நம்பினேன் யேசு நாதா இது

    தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா

    நின் அருளால் இங்கே வந்து-என்றும்
    நின் அடைக்கலமாக என்னையே தந்து
    முன்னாள் வினையைத் துறந்து ஆதி
    மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று

    சன்னதி முன் தொண்டன் நின்றே -என்றும்
    தாயான கருணை உனக்கு உண்டென்றே
    சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச்
    சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே

    அலைவாய்த் துரும்புபோல் ஆடி -உன
    ததி கருணை வரச் செம்பாதந் தேடித்
    தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின்
    தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி

    இனிய கருணை பொழிவேதா-எனை
    இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா
    கனி வினை நீக்கிய நீதா-நசரைக்
    கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா
    Saranam Nambinaen Yesu - சரணம் நம்பினேன் யேசு Saranam Nambinaen Yesu - சரணம் நம்பினேன் யேசு Reviewed by Christking on May 21, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.