Sundara Parama Deva - சுந்தரப் பரம தேவமைந்தன் - Christking - Lyrics

Sundara Parama Deva - சுந்தரப் பரம தேவமைந்தன்

சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும்

அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி
சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் பவத்துயர்
போடுங்கள் ஜெயத்தைக் கொண்
டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும்

விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்
டாடிட அவர் பதம்
தேடிட வெகு திரள்
கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும்

சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே
உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்
உயர்ந்து வாழ தீயோன்
பயந்து தாழ மிக
நயந்து கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்



Suntharap Parama Thaevamainthan Aesuk Kiristhuvukkuth
Thoththiram Pukalchchiniththiya Geerththanam Entum

Antharam Puviyum Thanthu Sontha Jeevanaiyum Eenthu
Aattinaar Namai Ontayk Koottinaar Arul Muti
Soottinaar Kirupaiyaal Thaettinaarae Thuthi

Paathakap Pasaasaal Vantha Theethenum Pavaththaal Nontha
Paavikalaana Namai Usaavi Meettarae
Vaetha Pithaavuk Kukantha Jaathiyaakak Koottavantha
Maesiyaavaip Pattum Visu Vaasa Veettarae
Kothanukaa Neethiparan Paathamathin Aatharavil
Koodungal Pavaththuyar
Podungal Jeyaththaik Konn
Daadungal Thuthisollip Paadungal Paadungal Entum

Vinnnnilulla Jothikalum Ennnadangaach Senaikalum
Vinthaiyaayk Kiristhuvaip Panninthu Pottavae
Mannnnilulla Jaathikalum Nannnum Pala Porulkalum
Vallaparan Enath Thuthi Solli Aeththavae
Annnalaam Pithaavuk Korae Punnnniyakumaaranaik Konn
Daatida Avar Patham
Thaetida Veku Thiral
Kootidath Thuthi Pukal Paatidap Paatida Entum

Saththiyath Tharasarkalum Viththakap Periyaarkalum
Sangaththor Kalungirupai Thangi Vaalavae
Eththisai Manitharkalum Pakthar Visuvaasikalum
Aeka Mikunj Samaathaana Maaka Vaalavae
Uththama Pothakarkalum Sathyathiruch Sapaikalum
Uyarnthu Vaala Theeyon
Payanthu Thaala Mika
Nayanthu Kirisvukku Jeyanthaan Nayanthaan Entum

Sundara Parama Deva - சுந்தரப் பரம தேவமைந்தன் Sundara Parama Deva - சுந்தரப் பரம தேவமைந்தன் Reviewed by Christking on May 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.