Thagamullavan Mel - தாகமுள்ளவன் மேல் - Christking - Lyrics

    Thagamullavan Mel - தாகமுள்ளவன் மேல்

    தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்
    வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர்

    ஊற்றும் ஐயா உம் வல்லமையை
    தாகத்தோடு காத்திருக்கிறேன் -நான்

    மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
    மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே

    முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
    கனவுகள் காட்சிகள், காண வேண்டுமே -2

    நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல
    நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் -2

    கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
    சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் -2

    வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும்
    வயல்வெளி அடர்ந்த காடாகணும் -2

    நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
    நல்வாழ்வு நம்பிக்கையும் வளர வேண்டுமே -2

    தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
    எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும் -2
    Thagamullavan Mel - தாகமுள்ளவன் மேல் Thagamullavan Mel - தாகமுள்ளவன் மேல் Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.