Then Inimaiyilum Yesuvin Naamam - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் - Christking - Lyrics

    Then Inimaiyilum Yesuvin Naamam - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
    திவ்விய மதுர மாமே - அதைத்
    தேடியே நாடி ஒடியே வருவாய்
    தினமும் நீ மனமே

    காசினிதனிலே நேசமதாக
    கஷ்டத்தை உத்தரித்தே - பாவ கசடதை
    அறுத்து சாபத்தைத் தொலைத்தார்
    கண்டுணர் நீ மனமே

    பாவியை மீட்கத் தாவியே உயிரை
    தாமே ஈந்தவராம் - பின்னும்
    நேமியாம் கருணை நிலைவரமுண்டு
    நிதம் துதி என் மனமே

    காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
    உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்'
    கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
    கருத்தாய் நீ மனமே

    துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
    துணைவராம் நேசரிடம் - நீயும்
    அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துணைக்
    காப்பார் ஆசைகொள் நீ மனமே

    பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
    புகழ்ந்து போற்றும் நாமம் - அதைப்
    பூண்டுகொண்டால் தான் பொன்னகர்
    வாழ்வில் புகுவாய் நீ மனமே
    Then Inimaiyilum Yesuvin Naamam - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் Then Inimaiyilum Yesuvin Naamam - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.