Thondu Seaiyath - தொண்டு செய்யத் தோழரே
தொண்டு செய்யத் தோழரே, துடிப்புடன் செல்வோம்
மண்டல மானிடர் மாண்பை நாடித்தேடுவோம்
ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம்
வேண்டும் தோழர் விரும்பிச்சேர விரைவுடன் சேர்ப்போம்
கட்சி நீங்கக் கல்வி ஓங்கக், கிராமம் களிக்கப்
பட்சிக்கும் கடன் கவலை பறந்தே ஓடிட
சிறுமை தீரச் செல்வாக்குச் சுதந்திரம் சேரப்
பொறுமை சேரணி வகுத்தும் ஐக்கியம் வளர
தாழ்ச்சியுள்ளோர் வாழ்வடையும் தருமம் ஓங்கிட
ஆட்சியாவும் அவர்கள் நன்மைக்கென்ற மாறிட
.சுத்த மனத் தூய்மையால் நம் சோர்வை ஓட்டுவோம்
முத்தர் போல் சுயநலந்துறந்து துணிவோம்
சத்திய விரதம் பூண்டு சாந்தமாய்ச் செல்வோம்,
அத்தனின் அருளைச் சார்ந்தும் ஆனந்தம் கொள்வோம்

Reviewed by Christking
on
May 28, 2018
Rating:
No comments: