Thuthi Ganam Seluthukirom - துதி கனம் செலுத்துகிறோம் - Christking - Lyrics

Thuthi Ganam Seluthukirom - துதி கனம் செலுத்துகிறோம்

துதி கனம் செலுத்துகிறோம்
திரியேக தேவனுக்கே
ஆராதனை நாயகரே
என்றென்றும் புகழ் உமக்கே

பரிசுத்தரே பரம பிதாவே
பரலோக ராஜாவே - இருள் ஏதும்
பாவமேதும் இல்லாத தூயவரே

பேரறிவும் ஞானமும் நீரே
ஆலோசனை கர்த்தர் நீரே - யோசனையில்
பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே

சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே
நீதியோடும் நிதானத்தோடும்
நியாயங்கள் தீர்ப்பவரே

என்னுயிராய் இருப்பவர் நீரே
என் பெலன் சுகம் நீரே - என் வழியே
சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்
Thuthi Ganam Seluthukirom - துதி கனம் செலுத்துகிறோம் Thuthi Ganam Seluthukirom - துதி கனம் செலுத்துகிறோம் Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.