Thuthi Umake Yesu Natha - துதி உமக்கே இயேசு நாதா - Christking - Lyrics

Thuthi Umake Yesu Natha - துதி உமக்கே இயேசு நாதா

துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உம்மையே
நித்தமும் காக்கும் உம் கிருபைகளை
எண்ணியே துதித்திடுவேன்

ஆதி அந்தமில்லா அனாதிதேவனே
அடைக்கலமானீர் எமக்கு நீரே
மாறா விசுவாசத்தை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம்

கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை
காருண்யத்தாலே காத்தீரே
வல்ல தேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம்

தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீரே
தந்தைபோல் எம்மை சுமந்தீரே
ஜீவனைத் தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம்

உன்னதா உந்தன் மகிமையைக் காண
சீயோனை எமக்கு காட்டினீரே
இயேசுவே உந்தன் வருகையின் நாளை
எண்ணியே துதித்திடுவோம்
Thuthi Umake Yesu Natha - துதி உமக்கே இயேசு நாதா Thuthi Umake Yesu Natha - துதி உமக்கே இயேசு நாதா Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.