Thuthikku Paathirar Enthan - துதிக்குப் பாத்திரரே - Christking - Lyrics

    Thuthikku Paathirar Enthan - துதிக்குப் பாத்திரரே

    துதிக்குப் பாத்திரரே
    எந்தன் துணையாளரே
    ஆபத்து காலத்தில் அடைக்கலமே
    ஆதரவே என் அனுகூலமே

    உம்மை ஆராதனை செய்கிறேன்
    உம்மை ஆராதனை செய்கிறேன்
    உன்னதரே உயர்ந்தவரே
    உம்மையே ஆராதிப்பேன்

    யெகோவா ஷாலோம் நீரே
    எந்தன் சமாதானமே
    நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
    சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர்

    யெகோவா ஷம்மா நீரே
    என்னோடு இருப்பவரே
    என்ன வந்தாலும் கலங்கிடேனே
    அப்பா நீர் என்னோடு இருப்பதனால்

    யெகோவா நிசி நீரே
    எந்தன் ஜெயக் கொடியே
    மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
    மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்
    Thuthikku Paathirar Enthan - துதிக்குப் பாத்திரரே Thuthikku Paathirar Enthan - துதிக்குப் பாத்திரரே Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.