Thuthithiduven Muzhu Idayathodu - துதித்திடுவேன் முழு இதயத்தோடு - Christking - Lyrics

    Thuthithiduven Muzhu Idayathodu - துதித்திடுவேன் முழு இதயத்தோடு

    துதித்திடுவேன் முழு இதயத்தோடு
    புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு

    உன்னதரே உம்மில் மகிழ்ந்து
    களிகூர்கின்றேன் தினமும்

    ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே
    அடைக்கலமே புகலிடமே

    முழு இதயத்தோடு துதித்திடுவேன்
    முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் -துதித்து

    நாடித் தேடி வரும் மனிதர்களை
    டாடி கைவிடுவதேயில்லை
    ஒருபோதும் கைவிடமாட்டீர் -முழு

    வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
    எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
    எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

    உமது திருநாமம் அறிந்தவர்கள்
    உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
    களிகூர்ந்து மகிழ்வார்கள் - தினம்
    Thuthithiduven Muzhu Idayathodu - துதித்திடுவேன் முழு இதயத்தோடு Thuthithiduven Muzhu Idayathodu - துதித்திடுவேன் முழு இதயத்தோடு Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.