Dhevanin aalayam - தேவனின் ஆலயம் - Christking - Lyrics

    Dhevanin aalayam - தேவனின் ஆலயம்

    தேவனின் ஆலயம் [C min T60 4/4]

    தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
    பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்
    மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்
    நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலபூம்

    Dhevanin aalayam thudhigalin aalayam
    Paramanin aalayam parisutha aalayam
    Magimaiyin aalayam magathuva aalayam
    Nandriyin aalayam naame avvaalayam

    கண்கள் காண்பது செவ்வையான பார்வையா
    எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா
    கைகள் செய்வது சுத்தமான செயலா
    கால்கள் போவது சரியான இடத்திற்கா
    நாவு பேசுவது சமாதான வார்த்தையா
    சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா

    Kangal kaanbadhu sevvaiyaana paarvaiyaa
    Ennam kondadhu nanmaiyaana ennamaa
    Kaigal seivadhu suthamaana seyalaa
    Kaalgal povadhu sariyaana idathirkaa
    Naavu pesuvadhu samaadhaana vaarthaiyaa
    Sindhithu seyalpadu unnai maatri kolvaayaa

    தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு
    ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு
    பரிசுத்த பரிசாய் பரனுக்கு படைத்திடு
    குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு காண்பித்திடு
    சுயத்தை வெறுத்து சிலுவையை சுமந்திடு
    சரீரமென்பதை ஆலயமாக்கிடு

    Dhevan koduthadhai avarukke koduthidu
    Jeevanulla baliyaai avarukku alithidu
    Parisutha parisaai paranukku padaithidu
    Kutramatra kaniyaai kristhuvukku kaanbithidu
    Suyathai veruthu silvaiyai sumandhidu
    Sareeram enbadhai aalayamaakidu
    Dhevanin aalayam - தேவனின் ஆலயம் Dhevanin aalayam - தேவனின் ஆலயம் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.