Naan oru paavi - நான் ஒரு பாவி

    Naan oru paavi - நான் ஒரு பாவி

    நான் ஒரு பாவி [A min T95 4/4]

    நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
    நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
    நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
    நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்

    Naan oru paavi Naan oru paavi
    Naan seidha paavangal pallaayiram
    Naan oru paavi Naan oru paavi
    Naan seidha paavathukku naan kaaranam

    பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
    என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன்
    உமது ஆலோசனை பாரம் என்றேன்
    உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன்

    Paavathil paavathil naan vizhundhuvitten
    Ennai naan ennai naan veruthu vitten
    Umadhu aalosanai baaram endren
    Ummai naan thallivittu dhooram sendren

    சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும்
    பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி
    தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும்
    மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி
    நான் செய்த பாவத்துக்கு நியாயங்கள் சொன்னேன் - என்னை
    இரட்சித்த தேவனிடம் காரணம் சொன்னேன்
    குற்றங்கள் ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை
    என்னில் நல்லதோர் குணமுமில்லை

    Sandharpangal endrum soolnilaigal endrum
    Paavam seidha pinnaale pazhi sumaththi
    Thoondi vittaar endrum maatrivittaar endrum
    Matravarai ennaalum kutrapaduthi
    Naan seidha paavathukku nyaayangal sonnen
    Ennai ratchitha dhevanidam kaaranam sonnen
    Kutrangal oppukkollum manamumillai - ennil
    Nalladhor gunamum illai

    எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்
    வேஷம்போட்டு திரிவதால் தெரிவதில்லை
    சொல்லில் ஒரு வாழ்க்கை சொல்லாமல் ஓர் வாழ்க்கை
    மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை
    கட்டளை மீறுகின்றேன் அனுதினமும் - ஒரு
    கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும்
    என்னைப்போல் பாவி இந்த உலகில் உண்டா - ஐயோ
    எனக்கு மன்னிப்பு உண்டா

    Ennangalukkulle ekkachakka paavam
    Vesham pottu thirivadhaal therivadhillai
    Sollil oru vaazhka sollaamal oru vaazhka
    Matravargal endhan nilai arivadhillai
    Kattalai meerugindren anudhinamum - oru
    Kallai pol maarinadhu endhan manamum
    Ennai pol paavi indha ulagil undaa - ayyo
    Enakku mannippu undaa

    மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
    மன்றாடும் உன்னை என் மகனாக்கினேன்
    மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
    மன்றாடும் உன்னை என் மகளாக்கினேன்

    Mannikka thaane mannukku vandhen
    Mandraadum unnai en maganaakinen
    Mannikka thaane mannukku vandhen
    Mandraadum unnai en magalaakinen

    புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
    பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
    எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
    உன்னை நான் என்னோடு சேர்த்துக்கொள்வேன்

    Pudhiya idhayathai koduthiduven
    Paavangal neenga unnai kazhuviduven
    Enadhu aaviyinaal nirappiduven
    Unnai naan ennodu serthukolven
    Naan oru paavi - நான் ஒரு பாவி Naan oru paavi - நான் ஒரு பாவி Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.