Unnathamanavare En Uraividam - உன்னதமானவரே என் உறைவிடம் - Christking - Lyrics

    Unnathamanavare En Uraividam - உன்னதமானவரே என் உறைவிடம்

    உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே - 2

    நீர்தானே என் உறைவிடம்
    நீர்தானே என் புகலிடம்
    ஆதலால் ஆபத்து நேரிடாது
    எந்த தீங்கும் மேற்கொள்ளாது
    கால் கல்லில் மோதாமலே
    காக்கும் தூதன் எனக்கு உண்டு - நீர்தானே

    சகலமும் படைத்தவரே
    சர்வ வல்லவரே - 2
    சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
    நடக்கச் செய்பவரே - 2 - ஆதலால்

    நான் நம்பும் தகப்பன் நீர் என்று
    நான் தினம் சொல்லுவேன் - 2
    வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
    தப்புவித்து காப்பாற்றுவீர் - 2

    மன்றாடும் போதெல்லாம்
    பதில் தந்து மகிழ்கின்றீர் - 2 -நான்
    ஆபத்து நேரம் என்னோடு இருந்து
    தப்புவித்து கனப்படுத்துவீர்

    நீடிய ஆயுள் தந்து
    திருப்தியாக்குகிறீர்
    உமது சிறகால் மூடி மூடி
    மறைத்து பாதுகாக்கின்றீர்

    வாஞ்சையாய் இருப்பதால்
    விடுதலை எனக்குண்டு
    உம்திரு நாமம் அறிந்ததால்
    எனக்கு உயர்வு நிச்சயமே
    Unnathamanavare En Uraividam - உன்னதமானவரே என் உறைவிடம் Unnathamanavare En Uraividam - உன்னதமானவரே என் உறைவிடம் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.