Vaa endrazhaikkum dheiva - வா என்றழைக்கும் தெய்வ - Christking - Lyrics

    Vaa endrazhaikkum dheiva - வா என்றழைக்கும் தெய்வ

    வா என்றழைக்கும் [D min T80 4/4]

    வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா
    நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார்

    Vaa endrazhaikkum dheiva satham ketkudhaa
    Nee thirumba maataaya unnai thedi paarkiraar

    உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால்
    அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார்
    உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால்
    அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார்
    உன் கஷ்டங்கள் அறிவார்
    உன் கண்ணீரை அறிவார்
    உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார்

    Un norungunda idhayathai avaridam koduthaal
    Adhai sari seidhu marupadiyum unnidam koduppaar
    Un manavedhanaigalai nee solli azhudhaal
    Avvedhanaigalai theerthu aarudhal alipaar
    Un kashtangal arivaar Un kanneerai arivaar
    Unnai paarpaar unnai meetpaar unnai kaappaar

    உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லு
    உனை வழிகாட்டும் இறைவனிடம் முழங்காலில் நில்லு
    உன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார்
    உன் உடலுன்னை கைவிட்டால் உயிராக இருப்பார்
    உன் தேவனை தேடு அவர் பாதங்கள் நாடு
    முழுதான மனதோடு துதியோடு

    Un manabaaram yaavaiyum avaridam sollu
    Unai vazhi kaatum iraivanidam muzhangaalil nillu
    Un uravugal kaivittaal uravaaga iruppaar
    Un udalunnai kaivittaal uyiraaga iruppaar
    Un dhevanai thedu avar paadhangal naadu
    Muzhudhaana manadhodu thudhiyodu

    உன் சோர்வினை தீர்ப்பது மனிதர்கள் இல்லை
    உன் நோய்களை தீர்ப்பது மருந்துகள் இல்லை
    நீ பிழைத்திட ஒரு வழி உன் கிறிஸ்து தானே
    உன் பாவங்கள் மறைவதும் அவரிடம்தானே
    வேறு வழியை தேடாதே நீ தூரம் செல்லாதே
    பதறாதே தயங்காதே மயங்காதே

    Un sorvinai theerpadhu manidhargal illai
    Un noygalai theerpadhu marundhugal illai
    Nee pizhaithida oru vazhi un kristhu thaane
    Un paavangal maraivadhum avaridam thaane
    Veru vazhyai thedaadhe nee dhooram sellaadhe
    Padharaadhe thayangaadhe mayangaadhe
    Vaa endrazhaikkum dheiva - வா என்றழைக்கும் தெய்வ Vaa endrazhaikkum dheiva - வா என்றழைக்கும் தெய்வ Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.