Yesuvukku Namathu Desathai - யேசுவுக்கு நமது தேசத்தைச் - Christking - Lyrics

    Yesuvukku Namathu Desathai - யேசுவுக்கு நமது தேசத்தைச்

    யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்
    பாசமாய் முயல்வோமே தாசரே

    தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு
    வாசம் வைத்தன்பின் சுவிசேஷத்தை ஏந்தி

    கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை
    எங்குமே யேசுராசா ஆளவே - அவர்
    சிங்காரக்கொடி மேலிலங்கக் குடிளெல்லாம்
    மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன்

    வித்தை பூர்வீக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு
    மெத்த்ப் பேர்போன இந்திய தேசமாம் - இதில்
    சத்தியமாக வந்த நித்யா யேசுவின் பரி
    சுத்த பரம ஞானம் ஜோதியாய்த் தோன்ற

    தீய மாமூல் வழக்கம் ஓய வீண்பக்தி நீங்க
    மாயக் கோட்பாடு முற்றும் மாறவே - யேசு
    தூயன் சத்தியவேத ஞாயவிதிகள் உள்ளம்
    பாயநம் நாட்டார் குணமாகவே வல்ல

    நம்மை வெறுத்து யேசுநாதனுக் கொப்புவித்துச்
    செம்மையுடன் உழைத்துச் சேவிப்போம் - அவர்க்
    குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும் படைத்து
    நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும்
    Yesuvukku Namathu Desathai - யேசுவுக்கு நமது தேசத்தைச் Yesuvukku Namathu Desathai - யேசுவுக்கு நமது தேசத்தைச் Reviewed by Christking on June 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.