FOR ONE WHO BELIEVES! - விசுவாசிக்கிறவனுக்கு! :- Daily Devotions - Christking - Lyrics

FOR ONE WHO BELIEVES! - விசுவாசிக்கிறவனுக்கு! :- Daily Devotions


"நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது" (மத்.17:20).

ஒரு பக்கத்தில், ஆண்டவர் தன்னை நிறுத்துகிறார். மறுபக்கத்தில், உங்கள் ஒவ்வொருவரையும் நிறுத்துகிறார். கர்த்தரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை. அதே நேரம், அவர் உங்களை சுட்டிக் காண்பித்து, "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். உங்களுக்குள்ளே விசுவாசம் வந்துவிட்டால் போதும்" என்கிறார்.

"விசுவாசம்" என்பது, எல்லா அணுகுண்டுகளிலும் மேலானது. விசுவாசத்தை எதிர்க்க, மலையினால் முடியாது. "நீ பெயர்ந்து சமுத்திரத்தில் தள்ளுண்டு போ" என்று, விசுவாசத்தோடு சொன்னால், மலை பெயர்ந்துதான் போகும். கடலில் தள்ளப்பட்டுதான் போகும். அப்படிப்பட்ட அபிஷேகம் உங்களுக்குள் உண்டு.

கர்த்தர் மோசேயைப் பார்த்து, நீ சமுத்திரத்திற்கு முன்பாக நின்று, உன் கோலை எடுத்து, சமுத்திரத்துக்கு முன்பாக நீட்டு என்றார். அதற்கு மோசே, இந்த கோல் என்ன மந்திரகோலா? நான் இந்த கோலை நீட்டினால், எப்படி இந்த சமுத்திரம் பிளந்துபோகும், எப்படி, இஸ்ரவேலர் அதில் வழிநடக்க முடியும், என்று சந்தேகப்படவில்லை. இது எப்படி முடியும், என்று கேள்வி கேட்கவில்லை.

அவர், ஒரு குழந்தையைப்போல, கர்த்தரை விசுவாசித்தார். தன் கையில் பிடித்திருந்த, கோலை நீட்டினபோது, பெரும் இரைச்சலோடு, அந்த சமுத்திரம் இரண்டாய்ப் பிளந்தது. இஸ்ரவேலர் எல்லோரும், அதன் வழியே நடந்து போனார்கள். விசுவாசிக்கிறவர்களால், கூடாத காரியம் ஒன்றுமில்லை.

இஸ்ரவேலர், யோர்தான் கரைக்கு வருகிறார்கள். அறுப்புக் காலம் முடிகிற வரையிலும், யோர்தானில் பெருவெள்ளங்கள் ஓடிக்கொண்டிருக்கும். சிறுபிள்ளைகள், பெண்கள், முதியவர்கள் அனைவருமாக ஏறக்குறைய முப்பது லட்சம் இஸ்ரவேலர் அதை எப்படிக் கடப்பது? தேவனாலே முடியும். "அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்." கர்த்தருடைய வார்த்தையின்படியே, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள், யோர்தான் நதியில் கால் வைத்தபோது, அந்த நதி அப்படியே பின்னிட்டுத் திரும்பினது. இஸ்ரவேலர் எல்லோரும், சுக பத்திரமாய் யோர்தானைக் கடந்தார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானில் கால் வைத்தார்கள்.

இது எப்படியாகும், என்று மலைத்துப்போய் நிற்காதிருங்கள். "கர்த்தராலே ஆகும்" என்று, விசுவாசத்தோடு சொல்லுங்கள். அன்றைய உலகத்திலிருந்த பெரிய மதிலான எரிகோவை, கர்த்தருடைய வார்த்தையின்படியே, இஸ்ரவேலர் சுற்றி வந்து ஆர்ப்பரித்தபோது, அந்த பெரிய மதில் நொறுங்கி விழுந்தது. கர்த்தர் ஏராளமான அற்புதங்களை வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார். இன்றைக்கும் அவர் உங்களைக் கொண்டு, அந்த அற்புதங்களை செய்ய வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

யோசுவா யுத்தத்தில் ஜெயிக்கும்படி, ஒரு பகல் முழுவதும் சூரியனை நடுவானத்தில் நிறுத்திக் காண்பித்தார். "கர்த்தரே தேவன்" என்று நிரூபிக்கும்படி, எலியா வானத்திலிருந்து அக்கினியை இறங்கப்பண்ணினார். ஆம், உங்கள் உள்ளத்தில் விசுவாசமிருக்குமென்றால், உங்களை எந்தப் பிசாசும், எந்த சத்துருவினுடைய வல்லமையும், தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்பதில்லை. பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? தேவ பிள்ளைகளுக்கு முன்பாக, நீ சமபூமியாவாய். பெரிய மந்திரவாதிகளே, பெரிய சூனியக்கட்டுகளே, தேவபிள்ளைகளை எதிர்த்து நின்றால், நொறுங்கிப் போவீர்கள்.

நினைவிற்கு:- "விசுவாசத்தினாலே, அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள். நீதியை நடப்பித்தார்கள். வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்" (எபி. 11:33).

=======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========

“So … you will say to this mountain, ‘Move from here to there,’ and it will move; and nothing will be impossible for you” (Mathew 17:20).

On one side God keeps Himself and on the other side, He keeps every one of you. Nothing is impossible for God. At the same time, He points out you and says, “If you can believe, all things are possible to him who believes”.

“Faith” is greater than all the atom-bombs. Even a mountain cannot oppose faith. If told ‘Move from here to there’ with faith, it will move. Indeed it will be pushed into the sea. You have such anointment in you.

God looked at Moses and said, “Lift up your rod and stretch out your hand over the sea.” Moses had full faith over God and so he did not put forth any questions of the doubt like “Is it a rod of a magician? When I lift this rod, how will the sea split? How could the children of Israel walk in between?” Since he had no doubts, he did not raise any such questions.

He believed in God as a child. When Moses stretched his hands over the sea, there was a great noise and the sea was divided into two with a dry land in between. All the Israelites crossed the Red Sea through the dry land created through the split. There is nothing impossible for those who believe. The Israelites come to the banks of Jordan. The river Jordan overflows all its banks during the whole time of harvest. How could the Israelites numbering nearly thirty lakhs consisting of children, women and elders cross the river? It is possible for God. In accordance with the Word of God, when the priests who were carrying the ‘Arc of Covenant’ stepped into the river, the water stood still. All the Israelites crossed the river safely and thus stepped into Canaan which was the Promised Land.

Do not be stunned with the thought how this could happen. Say with faith “It is possible for God.” The walls of Jericho were too big in those days and according to the Word of God they broke and fell when the children of Israel came around it shouting loudly. God has written about several miracles in the Scripture. Even today, He is powerful to do miracles through you.

For Joshua to win the battle, God made the sun stay static for a whole day. To prove ‘God is the Lord,’ Elijah made the fire to descend from the heaven. Yes, if you have faith in your heart, no devil and no power of satan could block you. No man shall be able to stand before you all the days of your life. Who are you, O great mountain? Before the children of God, you shall become a plain. O sorcerer, O witchcrafts, if you oppose the children of God, you will be broken to pieces.

To meditate: “…who through faith subdued kingdoms, worked righteousness, obtained promises” (Hebrews 11:33).

FOR ONE WHO BELIEVES! - விசுவாசிக்கிறவனுக்கு! :- Daily Devotions FOR ONE WHO BELIEVES! - விசுவாசிக்கிறவனுக்கு! :- Daily Devotions Reviewed by Christking on August 09, 2018 Rating: 5
Powered by Blogger.