Jeyam Jeyame - ஜெயம் ஜெயமே - Christking - Lyrics

    Jeyam Jeyame - ஜெயம் ஜெயமே

    Song: Jeyam Jeyame
    Sung by: Pastor Moses Rajasekar
    Album: Inba Satham
    Lyrics & Tunes: A.Thadash K. Stephen

    ஜெயம் ஜெயமே இயேசு நாமம் ஜெயமே
    ஜெயம் ஜெயமே இயேசு இரத்தம் ஜெயமே
    இரத்தம் ஜெயம் (8)

    1) சாத்தானுக்கு சாவுமணி அடிக்கப்போகிறோம்
    சத்துருவின் கோட்டைகளை முறிக்கப்போகிறோம் - ஓ (2)
    சேனைகளின் தேவனாகிய கர்த்தர் நாமத்தில்
    சீறிவரும் சாத்தானை மிதித்துப்போடுவோம் (2) - ஜெயம் ஜெயமே (2)

    2) துதியினால் எரிகோ கோட்டை தகர்ந்ததுபோல
    எதிரில் நிற்கும் தடைகளைத் தகர்த்துப்போடுவோம்
    ஜெகோவாநிசி எங்கள் முன்னே செல்வதால்
    எப்பேற்பட்ட யுத்தத்திலும் ஜெயிக்கப் போகிறோம் (2) - ஜெயம் ஜெயமே (2)

    3) கூலாங்கள் கோலியாத்தைக் கொன்றதுபோல
    சாத்தானை நெத்தியடி அடிக்கப்போகிறோம் - ஒரு - (2)
    ஜெகோவாஷம்மா எங்கள் கூட இருப்பதால்
    எதற்கும் நாங்கள் அஞ்சமாட்டோம் - (2) - ஜெயம் ஜெயமே (2)

    4) சாத்தானை அக்கினிக்கு இரையாக்கும்வரை
    எங்கள் ஆவி ஆத்துமா சரீரம் (என்றும்) ஓய்வதில்லை - (2)
    ஜெகோவாரஃபா எங்கள் கூட இருப்பதால்
    எப்பேற்பட்ட வியாதியும் நெருங்குவதில்லை - (2) - ஜெயம் ஜெயமே (2)


    Jeyam Jeyame - ஜெயம் ஜெயமே Jeyam Jeyame - ஜெயம் ஜெயமே Reviewed by Christking on August 28, 2018 Rating: 5
    Powered by Blogger.