Nandri Solli Paduvean - நன்றி சொல்லிப் பாடுவேன்

    Nandri Solli Paduvean - நன்றி சொல்லிப் பாடுவேன்

    Song: Nandri Solli
    Sung by: Sam Arun
    Music: Vicky Gideon
    Direction: A.V. Peter Elwis

    நன்றி சொல்லிப் பாடுவேன்
    நன்மை செய்த தேவனை
    வாழ்நாளெல்லாம் பாடுவேன்
    வாழ்வழித்த இயேசுவை - 2
    ஆராதிப்பேன், நான் ஆராதிப்பேன்
    ஜீவன் தந்தவரை நான் ஆராதிப்பேன் - 2

    என் மீறுதல்கள் யாவையும் நீர்
    மன்னித்த தேவன் நீரே
    என் குறைவுகளின் மத்தியில் நீர்
    நிறைவாக வந்தவரே - 2
    போற்றுவேன் உம்மை புகழுவேன்
    வாழ்நாளெல்லாம் உம்மை ஆர்ப்பரிப்பேன் - 2 - நன்றி

    விரோதமாய் எழும்பினோர்
    முன்பாக செழிக்கச் செய்தீர்
    எல்லைகளை விரிவாக்கி
    சமாதானத்தால் நிரப்பினீர் - 2
    ஆறுதலே என் தேறுதலே
    நான் நம்பிடும் என் நங்கூரமே - 2 - நன்றி


    Nandri Solli Paduvean - நன்றி சொல்லிப் பாடுவேன் Nandri Solli Paduvean - நன்றி சொல்லிப் பாடுவேன் Reviewed by Christking on September 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.