Anbu Piranthathu - அன்பு பிறந்தது - Christking - Lyrics

    Anbu Piranthathu - அன்பு பிறந்தது

    Song: Anbu Piranthathu
    Artist: Nethra
    Album: Anbin Pirappu
    Music: Stephen Sanders

    அன்பு பிறந்தது
    உலகில் வந்தது
    உயிரைத் தந்தது
    ஒருபோதும் மறவாத இயேசுவின் அன்பு

    என்னைத் தேடி வந்த அன்பு
    என்னைத் தெரிந்து கொண்ட அன்பு
    எனக்காய் உயிரைக் கொடுத்த அன்பு
    என்னை வாழ வைத்த அன்பு - ஒருபோதும்

    1) பிரபஞ்சம் அன்பு எல்லாம் மறையும் மேகம் தானே
    மனித அன்பு எல்லாம் கானல் நீர் தானே - (2)
    இயேசுவின் அன்பு ஒன்று தான் போதும் போதும் என்றுமே - (2)
    அது உன்னைத் தேற்றுமே என்றும் காத்துக் கொள்ளுமே
    தூய உள்ளம் தங்குமே தேவ சாயலாக்குமே - (2) - ஒருபோதும்

    2) அன்பு இல்லை என்றால் ஒன்றும் இல்லை நான்
    எல்லாம் இருந்தாலும் வாழ்வு மாயை தான் - (2)
    அன்பு சாந்தமுள்ளது, நீடிய தயவு உள்ளது - (2)
    அது எதையும் தாங்குமே சகலமும் என்றும் நம்புமே
    அது என்றும் வாழுமே அன்பே பெரியது என்றுமே - (2)
    - ஒருபோதும்

    3) அன்பைத் தேடும் நெஞ்சமே ஏங்கும் மனித உள்ளமே
    மாறும் உலகிலே மாறா அன்பு தானே - (2)
    இயேசுவின் அன்பு ஒன்று தான் போதும் போதும் என்றுமே - (2)
    உயிரைத் தந்த அன்பு தான் உயிராய்க் காக்கும் அன்பு தான்
    உனக்குத் தேவை அன்பு தான் இன்றே ஏற்றுக் கொள்ளவா... - (2)
    - ஒருபோதும்


    Anbu Piranthathu - அன்பு பிறந்தது Anbu Piranthathu - அன்பு பிறந்தது Reviewed by Christking on October 19, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.