Irakam Ennai Nadathi - இரக்கம் என்னை நடத்திச் - Christking - Lyrics

    Irakam Ennai Nadathi - இரக்கம் என்னை நடத்திச்

    Lyrics & Tune: Shalom
    Singer: Shalom
    Music: Vijay Ebenezer
    Camera & Editor: Vijay Ebenezer

    இரக்கம் என்னை நடத்திச் செல்லுது
    உம் இரக்கம் என்னை நடத்திச் செல்லுது - (2)
    என் பெலத்தினாலும் அல்ல
    என் சக்தியாலும் அல்ல
    என் திறமையாலும் அல்ல
    உம் இரக்கம் என்னை நடத்திச் செல்லுது - (2) - இரக்கம்

    1) தனித்தவளாய் நான் நடந்து போனாலும்
    தஞ்சமாக உந்தன் கரம் தாங்குது - (2)
    உடைந்து போன வாழ்க்கை என்று சொன்னாலும்
    உத்தமரே உம் தயவு தாங்குது - (2)
    என் உத்தமரே உம் தயவு தாங்குது - என் பெலத்தினாலும்

    2) பட்ட மரம் போல நான் வாழ்ந்தாலும்
    பரமனின் பார்வை என்மேல் பட்டது - (2)
    கண்களில் ஒளியின்றிப் போனாலும்
    கர்த்தரின் கரம் பிடித்துத் தாங்குது - (2)
    என் கர்த்தரின் கரம் பிடித்து தாங்குது - (2) - என் பெலத்தினாலும்

    3) அநாதையாய் நான் உலகில் வாழ்ந்தாலும்
    அருமையான தகப்பனும் நீர் அல்லவோ
    விதவை என்று பலர் தூற்றும் வேளையில்
    வாழ்க்கையில் விடியலும் நீர் அல்லவோ - (2)
    என் வாழ்க்கையில் விடியலும் நீர் அல்லவோ - (2) - என்
    - பெலத்தினாலும்


    Irakam Ennai Nadathi - இரக்கம் என்னை நடத்திச் Irakam Ennai Nadathi - இரக்கம் என்னை நடத்திச் Reviewed by Christking on October 21, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.