Oru Varthai - ஒரு வார்த்தை - Christking - Lyrics

    Oru Varthai - ஒரு வார்த்தை

    Album: JAMAKKARANIN SATHAM
    Lyrics,Tune & Sung by: Pr..REEGAN GOMEZ
    Music: Stephen Sanders
    Produced by: Jesus With Us Prayer House

    ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா
    எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேøŒய்யா - 2
    வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் - 2
    பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்
    உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா - 2
    - ஒரு வார்த்தை

    1. இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரே
    பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே
    உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா - 2
    - ஒரு வார்த்தை

    2. மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரே
    எங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயா
    உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா - 2
    - ஒரு வார்த்தை

    3. அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும்
    கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும்
    உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா - 2
    - ஒரு வார்த்தை


    Oru Varthai - ஒரு வார்த்தை Oru Varthai - ஒரு வார்த்தை Reviewed by Christking on October 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.