Nirappum - நிரப்பும் | Album : Ellam Aagum - 2 - Christking - Lyrics

    Nirappum - நிரப்பும் | Album : Ellam Aagum - 2

    Album: Ellam Aagum - 2
    Sung By: Eva.Jeeva
    Lyrics & Tune: Eva.Jeeva
    Music: Alwyn . M

    நிரப்பும் என்னை நிரப்பும்
    உந்தன் வல்லமையால் என்னை நிரப்பும்
    பயன்படுத்தும் உந்தன் கரத்தில்
    உம் சேவைக்கென்றே பயன்படுத்தும் - (2)

    ஜீவத் தண்ணீரே எங்கள் ஆவியானவரே
    நிரப்பிடுமே இந்த வேளையில் - (2) - நிரப்பும்

    1) ஆவியின் வரங்கள் தாருமே
    ஆவியின் கனிகள் வேண்டுமே - ஓ.... - (2)
    அக்கினியாய் எழும்பி ஜொலித்திட
    ஆவியானவரே என்னை நிரப்புமே - (2) - ஜீவத்

    2) உண்மையாய் ஊழியம் செய்திட
    உமக்காக எங்கும் ஓடிட - (2)
    உம் நாமத்தை என்றும் உயர்த்திட
    உன்னத ஆவியை ஊற்றுமே - (2) - ஜீவத்

    3) பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட
    பரிசுத்த ஆவியை தாருமே - (2)
    பரனே உந்தன் அருள் தந்து
    பாரினிலே என்னை நடத்துமே - (2) - ஜீவத்


    Nirappum - நிரப்பும் | Album : Ellam Aagum - 2 Nirappum - நிரப்பும் | Album : Ellam Aagum - 2 Reviewed by Christking on November 04, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.