Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான் - Christking - Lyrics

    Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான்

    Song: Rajathi Rajan Ivar Than
    Artist: Jagadeesh
    Album: Unnadhar Piranthaar
    Licensed: D.K. Enterprises

    ராஜாதி ராஜன் இவர் தான்
    புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)
    மண் மீது சாபத்தை தீர்த்திடவே
    மாசற்ற ஜோதியாய் வந்துதித்த
    மன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் - ராஜாதி

    1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரே
    வந்தனம் வந்தனமே
    சர்வேச நாதனே சர்குணனே
    சுந்தர நாயகனே
    உள்ளம் தேற்றிடும் உண்மை நேசனே
    இறைமகன் இயேசுவே
    மனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்
    உம் பாதம் பணிந்திடுவோம் - ராஜாதி

    2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்
    அன்புடன் உள்ளத்திலே
    அதிகாலைப் பொழுதில் தொழுதிடவே
    ஆலயம் சென்றிடுவோம்
    வானில் பறவைகள் கானம் பாடிட
    வீணையின் ராகமே
    பனித்துளி மின்னும் மலர்களின் வாசம்
    இல்லத்தில் புதுமணமே - ராஜாதி


    Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான் Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான் Reviewed by Christking on November 22, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.