Theerkan Uraitha Theerkamae - தீர்க்கன் உரைத்த தீர்க்கமே :- Pas.John Jebaraj - Christking - Lyrics

    Theerkan Uraitha Theerkamae - தீர்க்கன் உரைத்த தீர்க்கமே :- Pas.John Jebaraj

    தீர்க்கன் உரைத்த தீர்க்கமே !!
    ஆகம நிறைவேற்றமே !!
    இஸ்ரவேலின் பாடலே !!
    பூர்வகாலத் தேடலே !!

    எந்தன் முகவரி சேர்ந்ததே !!
    புறஜாதி என்னை மீட்டதே !!

    மீட்பின் இராகம் என்னுள் இசைக்க காரணர்!!
    இவரையன்றி வேறு ஏது இரட்சகர் !!
    இவருக்கீடு வேறில்ல - இவர்
    நாமத்திற்கு இணையில்ல …எந்தன் இயேசுவே….

    தமது சாயலை மனிதனில்
    நம் தேவன் வைத்தது அதிசயம் !!
    தேவன் தாமே படைத்ததை அவன்
    ஆளச்செய்ததும் அதிசயம் !!

    பாவம் வந்த காரணம்
    வீழ்ந்ததே அன்று என் இனம் - அதை
    மீட்க வந்த நிவாரணம் - அவர்
    மனித மீட்பின் பூரணம் .. எந்தன் இயேசுவே

    வார்த்தை மாம்சமானதால் - என்
    மாம்சம் ஆவியானதே
    இரட்சண்யத்தின் கீர்த்தனை புற
    ஜாதி வீட்டிலும் தொனிக்குதே
    மரண இருளும் போனதே
    விடியல் வெளிச்சம் வந்ததே
    பாதை இல்லா இடங்களில் - புது
    ஜீவப் பாதை திறந்ததே ….எந்தன் இயேசுவே

    Therkan uraitha theerkamae!!
    ahgama neeraivetramae !!
    Isravelin paadalae !!
    Poorvakala Thedalae !!

    Endhan mugavari sernthathey!!
    Purajathi ennai meetuthey!!

    Meetpin ragam ennul isaika kaaranar!!
    Ivariyandri veeru yeadhu irathachagar!!
    Ivarukeedu veareellai -ivar
    namathirku inaiillai… Enthan yeasuvae…

    1.Thamadhu sayalai manithanil nam
    devan vaithadhu adhisayam
    Devan thamey padaithathai avan
    aazha seithadhum adhisayam

    Paavam vandha kaaranam
    Veelnthadhey andru en inam

    Adhai meetka vandha neevaranam- avar
    Manitha meetpin pooranam -2 Enthan yeasuvey…

    2.Varthai mamsamanathal – En
    Mamsam aaviyanadhey
    Iratchanyathin keerthanai pura
    Jathi veetilum thonikuthey

    Marana irulum ponadhey
    Vediyal velicham vandhadhey

    Paathai illa idangalil – puthu
    Jeeva padhai thiranthadhu (2) Enthan Yeasuvey…


    Theerkan Uraitha Theerkamae - தீர்க்கன் உரைத்த தீர்க்கமே :- Pas.John Jebaraj Theerkan Uraitha Theerkamae - தீர்க்கன் உரைத்த தீர்க்கமே :- Pas.John Jebaraj Reviewed by Christking on July 05, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.