Yegova Mephalti - யேகோவா மெஃபல்டி :- Sis.Johannah Elangovan - Christking - Lyrics

    Yegova Mephalti - யேகோவா மெஃபல்டி :- Sis.Johannah Elangovan



    யேகோவா மெஃபல்டி
    என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே
    யேகோவா மெஃபல்டி
    என் இரட்சண்ய கன்மலை நீரே

    ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையே
    வலக்கரம் நீட்டி விடுவித்தீரே-2
    வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
    நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்-2
    -யேகோவா மெஃபல்டி

    1.எத்தனை அதிகாரம் எழும்பின போதும்
    கர்த்தர் விடுவித்தீரே
    சத்துருவின் சேனை சூழ்ந்த போதும்
    கர்த்தர் விடுவித்தீரே

    ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்
    எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே-2

    வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2

    2.மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்
    கர்த்தர் விடுவித்தீரே
    பாதாள வல்லமைகள் எழும்பினபோதும்
    கர்த்தர் விடுவித்தீரே
    கைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும் கன்மலையின் கர்த்தர் நீரே-2

    வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2-யேகோவா மெஃபல்டி


    Updating Soon...


    Yegova Mephalti - யேகோவா மெஃபல்டி :- Sis.Johannah Elangovan Yegova Mephalti - யேகோவா மெஃபல்டி :- Sis.Johannah Elangovan Reviewed by Christking on October 19, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.