Thaveethin Oorinile - தாவீதின் ஊரினிலே :- Folk Christmas Song - Christking - Lyrics

    Thaveethin Oorinile - தாவீதின் ஊரினிலே :- Folk Christmas Song



    தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரே
    மனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரே
    பாவங்கள் போக்க வந்த பரிசுத்த பாலகனே
    தொழுவத்தில் முன்னணை தான் உமக்கோ என் கோமகனே
    பாடூவேன் ஆராரிராரோ
    {கொண்டாட்டம் கொண்டாட்டம்
    கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம்} X2
    தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரே
    மனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரே...

    ஏசாயா வார்த்தைப்படி அவர் கன்னிமரியிடம் பிறப்பாராம்
    மரியாளும் கலங்கிடவே யோசேப்பும் திகைத்திடவே
    தூதரின் வார்த்தைப்படி யோசேப்பு நடந்திடவே
    சத்திரத்தில் உனக்கு இடமில்லையோ
    மாட்டிடை தான் இங்கு வீடானதே
    முன்னணையில் தவழ
    ஆட்டு மந்தை மகிழ
    தாழ்மை கண்டு நெகிழ
    இவ்வுலகமே புகள
    {கொண்டாட்டம் கொண்டாட்டம் கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம்} X2
    - தாவீதின் ஊரினிலே....

    யூதரின் ராஜாவாம் அவர் எங்கே பிறந்தாராம்,
    ஞானியரும் கேட்டிடவே ஏரோதும் கலங்கிடவே
    பாலகன் எங்கே பிறப்பாரோ !! பாதை சோல்வார் யார்யாரோ
    வானில் நட்சத்திரம் வந்து வழிகாட்டவே
    வான சாஸ்த்ரிகளும் அதன் பின் செல்லவே
    வான தூதர் பாட
    கான மேய்ப்பர் ஆட
    வெள்ளி ஒன்று ஓட
    வான சாஸ்திரி தேட
    {கொண்டாட்டம் கொண்டாட்டம் கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம்} X2
    - தாவீதின் ஊரினிலே....


    Thaveethin Oorinile
    Thazhmaiyaai piranthavarae
    Manithanai meetidavaey
    manukolam yettavarae
    Paavangal pokka vantha parisutha paalaganae
    Thozhuvathin munnanai than
    Umako en Komaganae
    Paaduvon Aaaraareeraro
    {Kondatam kondatam
    kiristhu pirantha kondatam} X2
    Thaveethin Oorinile
    Thazhmaiyaai piranthavarae
    Manithanai meetidavaey
    manukolam yettavarae...

    Yesaya vaarthai padi Aavar
    kannimariyidam pirapaaraam
    Mariyaalum Kalangidavae
    Yoseppum Thikaithidavae
    Thoothari Vaarthaipadi
    Yoseppu nadanthidavae
    sathirathil unakku idamillayo
    Maattidaithan inga veedanatho

    Munnaiyil Thavazha
    Aattu Manthai Mahizha
    Thazhmai kandu Negizha
    Evvulagmae Puhazha
    {Kondatam kondatam
    kiristhu pirantha kondatam} X2
    - Thaveethin Oorinile...

    Yudhaarin Rajaavam
    Avar enge pirantharam
    gnaniyarum kettidavae
    Yerothum kalangidave
    Paalagan enge pirapparo?
    Paathai solvar yar yaaro?
    Vaal natchiram vanthu vazhi kaattavae
    Vaana sthathikalam athin pin sellavae

    Vaana Thuthar Paada
    Gaana Meipper Aada
    Velli Ontru Ooda
    Vaana Sasthiri theda
    kiristhu pirantha kondatam} X2
    - Thaveethin Oorinile...



    Thaveethin Oorinile - தாவீதின் ஊரினிலே :- Folk Christmas Song Thaveethin Oorinile - தாவீதின் ஊரினிலே :- Folk Christmas Song Reviewed by Christking on November 29, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.