Yesu Pirandhar - இயேசு பிறந்தார் :- Pas. Anbu Raj - Christking - Lyrics

    Yesu Pirandhar - இயேசு பிறந்தார் :- Pas. Anbu Raj



    1.எந்தன் தாயும் எந்தன் தந்தையும்
    எந்தன் நண்பனும் எந்தன் உயிரும்
    ஆன இயேசு பிறந்தார்-2

    எனக்காக இன்று பிறந்தார்
    என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2
    கரங்களை தட்டி கைகளை உயர்த்தி
    சப்தமாய் துதித்து பாலனை புகழ்
    வந்த நந்நாள் இதுவே-2

    கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4

    2.என்னை தேற்ற என்னை மாற்ற
    என்னை காக்க என்னை நடத்த
    இயேசு இன்று பிறந்தார்-2

    எனக்காக இன்று பிறந்தார்
    என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2
    நன்றி சொல்வேன் நல்ல நண்பனே
    நன்மைகள் செய்த எந்தன் இயேசுவே
    நன்றி நன்றி நன்றியே-2

    நன்றி நன்றி நன்றியே-4

    3.எந்தன் பாவம் எந்தன் சாபம்
    எந்தன் கண்ணீர் எந்தன் நோய்கள்
    தீர்க்க இயேசு பிறந்தார்-2

    எனக்காக இன்று பிறந்தார்
    என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2
    உள்ளங்கள் மகிழ் உறவுகள் பெருக
    தேவனாம் இயேசு பாலனாய் பிறந்த
    கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-2

    கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4


    English


    Yesu Pirandhar - இயேசு பிறந்தார் :- Pas. Anbu Raj Yesu Pirandhar - இயேசு பிறந்தார் :- Pas. Anbu Raj Reviewed by Christking on November 22, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.