கண்விழித்து காத்திருக்கும் - கண்விழித்து காத்திருக்கும் :- Pr.R.Reegan Gomez - Christking - Lyrics

    கண்விழித்து காத்திருக்கும் - கண்விழித்து காத்திருக்கும் :- Pr.R.Reegan Gomez



    கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ
    தேசத்தை காத்திடும் காவல்காரன் நீ
    தூங்கிப்போனதேனோ
    தளர்ந்து போனதேனோ
    எழும்பிடு எழும்பிடு
    உன் வல்லமையை தரித்திடு
    அயராமல் ஜெபித்திடு
    கண்ணுறங்காமல் காத்திரு

    எருசலேமின் அலங்கத்தைப்பார்
    மகிமையை இழந்த நிலைதனைப்பார்
    சீயோனின் வாசல்களில்
    ஆனந்தம் ஒழிந்தது பார்

    மங்கி எரிந்திடும் காலமல்ல இது
    தூங்கி இளைப்பாறும் நேரமல்ல
    அனல் கொண்டு நீ எழுந்தால்
    காரிருள் நீங்கிடுமே

    உலர்ந்த எலும்புகள் உயிரடையும்
    ஆதி எழுப்புதல் மீண்டும் வரும்
    மாமீட்பர் நம் இயேசுவை
    தேசங்கள் அறிந்திடுமே

    கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்
    தேசத்தை காத்திடும் காவல்காரன் நான்
    தூங்கிப் போவதில்லை
    தளர்ந்து போவதில்லை
    எழும்புவேன் எழும்புவேன்
    வல்லமையைத் தரித்துக்கொள்வேன்
    அயராமல் ஜெபித்திடுவேன்
    கண்ணுறங்காமல் காத்திருப்பேன்


    English


    கண்விழித்து காத்திருக்கும் - கண்விழித்து காத்திருக்கும் :- Pr.R.Reegan Gomez கண்விழித்து காத்திருக்கும் - கண்விழித்து காத்திருக்கும் :- Pr.R.Reegan Gomez Reviewed by Christking on December 09, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.