Thai Marandhalum - தாய் மறந்தாலும் :- Prabhu Isaac - Christking - Lyrics

    Thai Marandhalum - தாய் மறந்தாலும் :- Prabhu Isaac



    தாய் மறந்தாலும் அவர் உன்னை
    ஒருபோதும் மறப்பதில்லை
    உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
    ஒருபோதும் விடுவதில்லை-2

    ஆ.. அல்லேலூயா.. ஓ... ஓசன்னா-2-தாய் மறந்தாலும்

    1.பெற்றோர் உன்னை மறந்தாலும்
    உற்றார் உன்னை கைவிட்டாலும்-2
    உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
    உன்னை ஒருபோதும் மறப்பதில்லை-2-தாய் மறந்தாலும்

    2.நம்பினோர் கைவிட்டாலும்
    நண்பர்கள் விலகிட்டாலும்-2
    நல்ல நண்பர் நம் இயேசுவே
    உன்னை ஒருபோதும் கைவிடாரே
    உண்மை நண்பர் நம் இயேசுவே
    உன்னை ஒருபோதும் கைவிடாரே-தாய் மறந்தாலும்

    3.அன்பானவர் மறைந்தாரோ
    ஆதரவை இழந்தாயோ-2
    ஆறுதலின் தேவன் இயேசுவே
    உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்
    உண்மை தேவன் நம் இயேசுவே
    உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்

    தாய் மறந்தாலும் அவர் என்னை
    ஒருபோதும் மறப்பதில்லை
    உள்ளங்கையில் என்னை வரைந்தவர்
    ஒருபோதும் விடுவதில்லை-2

    ஆ.. அல்லேலூயா.. ஓ... ஓசன்னா

    தாய் மறந்தாலும் அவர் உன்னை
    ஒருபோதும் மறப்பதில்லை
    உள்ளங்கையில் நம்மை வரைந்தவர்
    ஒருபோதும் விடுவதில்லை
    அவர் ஒருபோதும் மறப்பதில்லை
    இயேசு ஒருபோதும் விடுவதில்லை


    English


    Thai Marandhalum - தாய் மறந்தாலும் :- Prabhu Isaac Thai Marandhalum -  தாய் மறந்தாலும் :- Prabhu Isaac Reviewed by Christking on February 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.