Thevan Ezhuthidum Kaaviyam - தேவன் எழுதிடும் காவியம் :- Giftson Durai ft.Ditty Ann Denny - Christking - Lyrics

Thevan Ezhuthidum Kaaviyam - தேவன் எழுதிடும் காவியம் :- Giftson Durai ft.Ditty Ann Denny



தேவன் எழுதிடும் காவியம்
நீயும் நானும் அதின் வரிகளே
வாழும் வாழ்க்கை அதில் ஓவியம்
இன்பமும் துன்பமும் அதின் நிறங்களே

Bridge

செல்வம் தேடி அலைகிறோம்
பாரம் கொஞ்சம் சேர்க்கிறோம்
வாழும் அர்த்தம் மறக்கிறோம்
இவை சரிதானோ ?

படைப்பை தேடி அலைகிறோம்
படைத்தவரை கொஞ்சம் மறக்கிறோம்
முகத்தில் சிரிப்பை இழக்கிறோம்
இவை சரிதானோ ?

Chorus

நெஞ்சம் உன்னை கேட்கும்
கொஞ்சம் மனதால் சிரித்தால் என்ன
பாரம் உண்மை கேட்கும்
கொஞ்சம் என்னை மறந்திடு x2

Verse 1

பறவையை கொஞ்சம் உற்றுப் பார்
அது விதைத்து அறுக்கிறதோ
அவைகளை நடத்தும் தேவன்
உன்னை அனுதினம் மறப்பாறோ

Verse 1 Connect

யாருக்கும் நில்லா நேரம்
அது விரைந்து மறைகிறதே
கவலையை மட்டும் நினைத்தால்
அது தனக்குள் அழுகிறதே

துயரங்கள் கொஞ்சம் அகற்றிடு
அது இனிமை சேர்க்கும்
இயேசுவை கொஞ்சம் நினைத்திடு
அதில் புதுமை சேர்க்கும்

கவலைகள் கொங்சம் அகற்றிடு
அது அழகு சேர்க்கும்
தேவனை கொஞ்சம் நினைத்திடு
அதில் முழுமை சேர்க்கும்


English


Thevan Ezhuthidum Kaaviyam - தேவன் எழுதிடும் காவியம் :- Giftson Durai ft.Ditty Ann Denny Thevan Ezhuthidum Kaaviyam - தேவன் எழுதிடும் காவியம் :- Giftson Durai ft.Ditty Ann Denny Reviewed by Christking on February 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.