Vendam Brother Sister - வேணாம் பிரதர் சிஸ்டர் :- Alwin Paul - Christking - Lyrics

    Vendam Brother Sister - வேணாம் பிரதர் சிஸ்டர் :- Alwin Paul



    வேணாம் Brother, Sister, இந்த பாவ வாழ்க்கை!
    அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! - (சங்கீதம் 102:3)
    தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
    உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!! - (லூக்கா 9:62)

    செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும். – (பிரசங்கி 10:1)
    மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும். - (2)
    பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும்
    கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும். – (1 யோவான் 2:1)

    உலகத்தின் மேல மெரசல் ஆனா
    ஆண்டவர் உறவில் விரிசல் விழும். - (2) - (1 யோவான் 2:15)
    கண்களில் தான்பா ஆரம்பிக்கும்
    பேர வீணடிச்சி அழிச்சி போட்டிடும். – (மத்தேயு 6:22,23)
    கண்களில் தான்பா ஆரம்பிக்கும் - உன் பேர வீணடிச்சிடும்.

    இதயத்தின் ஆழம் அறிந்தவரே
    என் Heart – Beat எல்லாம் புரிந்தவரே - (நீதிமொழிகள் 24:12)
    உமக்கு மறைவாய் எங்கே போவேன்
    என்றும் உம்மை பின்பற்றுவேன். – (சங்கீதம் 139:7)
    உமக்கு மறைவாய் எங்கே போவேன் - உம்மை பின்பற்றுவேன்.

    வேணாம் பிரதர், சிஸ்டர், இந்த பாவ வாழ்க்கை!
    அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! - (யாக்கோபு 4:14)
    தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
    உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!!

    வேணும் பிரதர், சிஸ்டர், ஒரு தூய வாழ்க்கை!
    அது பளிங்க போல வெண்மையான தேவ வாழ்க்கை!! – (வெளி 22:1)
    தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
    உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!!


    English


    Vendam Brother Sister - வேணாம் பிரதர் சிஸ்டர் :- Alwin Paul Vendam Brother Sister - வேணாம் பிரதர் சிஸ்டர் :- Alwin Paul Reviewed by Christking on February 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.