நீர் அல்லவோ பரலோகத்திலிருக்கிற தேவன்! | Are You Not God in Heaven! - Christking - Lyrics

நீர் அல்லவோ பரலோகத்திலிருக்கிற தேவன்! | Are You Not God in Heaven!



"எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாது" (2 நாளா. 20:6).

வேதத்திலுள்ள துதிகளில், யோசபாத்தின் துதி உள்ளத்தை மிகவும் உருக்குகிறதாயிருக்கிறது. யோசபாத்துக்கு விரோதமாக சத்துருக்கள் யுத்தத்திற்கு வந்தபோது, யோசபாத் தன் தேசமெங்கும் உபவாசத்தை கூறினான். மட்டுமல்ல, ஜனங்கள் மத்தியிலே நின்று யோசபாத் அருமையாய் துதிக்க ஆரம்பித்தான். எத்தனை முன்மாதிரியான துதியின் சத்தம் இது!

2 நாளாகமம் 20-ம் அதிகாரத்தில், அவனுக்கு விரோதமாய் திரளாய் கூடி வந்த சத்துருக்களைப் பற்றி அவன் பேசவில்லை. அவனுடைய பெலவீனத்தைப் பற்றியும் பேசவில்லை. அவனுடைய வீரர்களின் குறைவைப் பற்றியும் பேசவில்லை. அப்படியானால் அவன் எதைக் குறித்து பேசினான்? கர்த்தருடைய மேன்மையை, மகிமையை, முக்கியத்துவத்தையே பேசி உயர்த்தினான். பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன், என் பிதாக்களின் தேவனாகிய நீர் அல்லவோ கர்த்தர். அம்மோனியர் ஆயிரம் பேர் வந்தாலும் என்ன? புறஜாதி ராஜாக்கள் எழுந்தால் என்ன? வல்லமையும், பராக்கிரமமும் உம்முடைய கையில் அல்லவோ இருக்கிறது. ஆண்டவரே, நீர் அல்லவோ இந்த கானான் தேசத்தை வாக்குத்தத்தமாகக் கொடுத்தீர், நீர் அல்லவோ சத்துருக்களை துரத்திவிட்டு இந்த இடத்தை எங்களுக்குச் சுதந்தரமாக்கினீர், நீர் அல்லவோ எங்களை நிலைநிறுத்தி பெலப்படுத்தினீர், என்றெல்லாம் கூறி துதித்துக்கொண்டேயிருந்தான்.

தேவபிள்ளைகளே, நீங்கள் நன்றியுள்ள இருதயத்தோடு, ஆண்டவரே, நீர் அல்லவோ எங்களை தேடிவந்து அன்பு செலுத்தி உம்முடன் கூட்டிக்கொண்டீர்? நீர் அல்லவோ உம்முடைய அன்பினால் எங்களை விலைக்கு வாங்கி ராஜாவாகவும், ஆசாரியனுமாக ஆக்கினீர். இப்பொழுதும் நீரே எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தும் என்று சொல்லுங்கள்.

உங்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சனையா? அதைக் குறித்து கவலைப்பட்டு சோர்ந்துபோகாதிருங்கள். ஆண்டவரே நீர் அல்லவோ என்னுடைய திருமணத்தை ஒழுங்கு செய்தீர்? தேவ சமுகத்தில் என்னை குடும்பமாக்கினீர்? எங்கள் திருமண வைபவத்தில் பிரசன்னராய் இருந்து உம்முடைய மகிமையால் நிரப்பினீர்? இப்பொழுதும் நீரே எங்கள் குடும்பத்தில் கர்த்தராய் இருந்து நீரே நடத்த வேண்டும் என்று சொல்லி ஸ்தோத்தரியுங்கள். அப்போது உங்கள் குடும்ப வாழ்க்கையில் உள்ள எல்லாப் பிரச்சனைகளும் நீங்கிப்போகும்.

நீங்கள் துதியோடு கர்த்தரைப் பார்த்தால், அவர் உங்கள் சத்துருவை விரட்டியடிப்பார். உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற பிரச்சனைகளை பட்சிக்கிற அக்கினியாய் சுட்டெரிப்பார். உங்களுடைய நோகளையும், பலவீனத்தையும் நீக்கிப்போடுவார். தேவபிள்ளைகளே, உங்கள் பிரச்சனைகளை நோக்கிப் பார்க்காதேயுங்கள். பிரச்சனைகளை நீக்க வல்ல கர்த்தரை நோக்கிப் பாருங்கள்.

நினைவிற்கு:- "எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது" (2 கொரி. 10:4).


“O Lord God of our fathers, are you not God in heaven and do you not rule over all the kingdoms of the nations and in your hand is there not power and might, so that no one is able to withstand you” (II Chronicles 20:6).

Of all the praises in the Scripture, the praise of Jehoshaphat is a heart-melting one. When his enemies came against him in war, the first instruction he gave to the people was that all in Judah should fast and pray. Further, he stood before the crowd and began to worship God. What a model of the voice of praise it is!

In the 20th chapter of II Chronicles, he did not speak about the enemies who came in a big group, he did not speak about his weakness and he did not speak about his warriors who were less in number. If so, about what did he speak? He exalted God by speaking His glory and importance. "O Lord God of our fathers, are you not God in heaven? What if the Ammonites come in thousands? What if the gentile kings rise against you? Is not the power and might in your hands? Is it not you who promised us the land of Canaan? Is it not you who cast out the enemies and help us to inherit this place? Is it not you who raised us and strengthened us?" Thus he went on praising God.

Dear children of God, say with a heart of gratitude, "Lord, is it not you who came in search of us, showed love and added us to you? Is it not you who bought us with your love and made us kings and priests? Now also you may bless us and guide us."

Is there a problem in your marital life? Do not get disheartened. Praise God saying, "Lord, is it not you who made our marriage come through? You made us a family. In our marriage function, it was you who filled your presence with glory. Now we are in trouble and you have to guide us as God." If you do this, all your problems will vanish.

If you look at God with praise, He will cast out your enemy. All the problems which arise against you would be burnt by Him like a devouring fire. He will wipe away all your sickness and weaknesses. Dear children of God, do not look up to your problems but look up to God who could clear all your problems.

To meditate: “For the weapons of our warfare are not carnal but mighty in God for pulling down strongholds” (II Corinthians 10:4).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நீர் அல்லவோ பரலோகத்திலிருக்கிற தேவன்! | Are You Not God in Heaven! நீர் அல்லவோ பரலோகத்திலிருக்கிற தேவன்! | Are You Not God in Heaven! Reviewed by Christking on April 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.