Devan Enn Adaikalam - தேவன் என் அடைக்கலம்

Song: | Devan Enn Adaikalam |
Album: | Single |
Lyrics & Tune: | Sujatha Selwyn |
Music: | Prithivi Samuel |
Sung by: | Sujatha Selwyn |
- Tamil Lyrics
- English Lyrics
தேவன் என் அடைக்கலம்
தேவன் என் பெலனும்
ஆபத்துக்காலத்தில் துணையானவர்
பூமி நிலை மாறிப் போனாலும்
மலைகள் கடலில் தள்ளுண்டாலும்
சேனைகளின் கர்த்தர் நம்முடனே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே
அவர் என் யுத்தங்கள் யாவற்றையும்
பூமியுன் முடிவு வரை ஓயச்செய்தார்
வில்லை ஒடித்து ஈட்டியை முறித்து
இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கின்றார்
அவரை மகிழ்விக்கும் நதி ஒன்றுண்டு
அதின் நடுவில் அவர் இருப்பிடம் உண்டு
அமர்ந்திருந்து நானும் மெளனமாயிருந்து
அவரே தேவனென்று அறிந்து கொண்டேன்
English
Devan Enn Adaikalam - தேவன் என் அடைக்கலம்
Reviewed by Christking
on
May 25, 2020
Rating:

No comments: