Melanaverae - மேலானவரே | Rev. Vijay Aaron - Christking - Lyrics

    Melanaverae - மேலானவரே | Rev. Vijay Aaron



    மேலானவரே-என்
    அருகில் இருப்பதால்
    எதற்கும் பயமில்லை
    அவர் நடத்தி செல்கின்றார்-2

    ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
    ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2

    1.அகதி இல்லை ஒருநாளும்
    குடியுரிமை தந்திட்டார்
    அடிமை இல்லை ஒருபோதும்
    பிள்ளையாக மாற்றினார்-2

    திரு இரத்தத்தால் மீண்டும் என்னை
    பிறக்க செய்தார்
    அவர் சுவாசத்தால் மீண்டும் என்னை
    வாழ செய்தார்

    ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
    ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2

    2.தடைகள் இல்லை ஒருநாளும்
    வெற்றிகளை தந்தாரே
    தளரவில்லை ஒருபோதும்
    பெலன் எனக்கு தந்தாரே-2

    வானில் தூதர் சேனையோடு
    இறங்கி வருவார்
    என்றென்றுமாய் இயேசுவோடு
    சேர்ந்து வாழ்வேன்

    ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
    ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2-மேலானவரே


    English


    Melanaverae - மேலானவரே | Rev. Vijay Aaron Melanaverae - மேலானவரே | Rev. Vijay Aaron Reviewed by Christking on May 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.