Devan Kangalil Enakku - தேவன் கண்களில் எனக்கு | Sis.Kirubavathi Daniel | Sis.Amudha David - Christking - Lyrics

    Devan Kangalil Enakku - தேவன் கண்களில் எனக்கு | Sis.Kirubavathi Daniel | Sis.Amudha David



    தேவன் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
    என்னை பேர் சொல்லி அழைத்து அறிந்தாரே
    ஜீவ வசனம் என்னை தேற்றுமே
    தூய வேதம் என்னை காக்குமே

    கன்மலை தேனால் நிரப்பினாரே
    உசித கோதுமையால் போசித்தாரே
    நோய்கள் இல்லா நன்மைகள் செய்து
    வாக்களித்து என்னை வாழவைத்தாரே

    தேவன் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
    என்னை பேர் சொல்லி அழைத்து அறிந்தாரே

    நற்கனி தரும்படி நாட்டினாரே
    திராட்சை செடியாய் என்னை மாற்றினாரே
    நாலு பக்க நிழலாய் என்னோடு இருந்து
    வருடம் எல்லாம் என்னை காத்திட்டாரே

    தேவன் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
    என்னை பேர் சொல்லி அழைத்து அறிந்தாரே

    நமக்காக யுத்தம் செய்தாரே
    ஜெயம் அளித்து நம்மை நடத்தினாரே
    நீதியின் பாதையில் நித்தமும் நடத்தி
    பெரிய காரியம் முடித்திட்டாரே

    தேவன் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
    என்னை பேர் சொல்லி அழைத்து அறிந்தாரே
    ஜீவ வசனம் என்னை தேற்றுமே
    தூய வேதம் என்னை காக்குமே
    தேவன் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
    என்னை பேர் சொல்லி அழைத்து அறிந்தாரே


    English


    Devan Kangalil Enakku - தேவன் கண்களில் எனக்கு | Sis.Kirubavathi Daniel | Sis.Amudha David Devan Kangalil Enakku - தேவன் கண்களில் எனக்கு |  Sis.Kirubavathi Daniel | Sis.Amudha David Reviewed by Christking on May 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.