Aa Ambara Umbara - ஆ அம்பர உம்பர - Christking - Lyrics

    Aa Ambara Umbara - ஆ அம்பர உம்பர


    Aa Ampara Umpara Pukalunthiru
    Aathipan Piranthaar

    Aathipan Piranthaar Amalaathipan Piranthaar

    Anpaana Paranae Arul Maevung Kaarananae Nava
    Achchaya Sachchitha Ratchakanaakiya
    Uchchithavaranae

    Aatham Pavamara Neetham Niraivaera Antu
    Alliraavinil Thollaiyitaiyinil
    Pullannaiyir Piranthaar

    Njaaniyar Thaeda Vaanavar Paada Mika
    Nannaya Unnatha Pannarum Aesaiyaa
    Innilam Piranthaar

    Konavar Naada Thaanavar Konndaada Entu
    Koththirar Thoththiranj Saattida Vae Yootha
    Koththiran Piranthaar

    Vinnnudu Thona Mannavar Paena Aerothu
    Mainthanin Sinthaiyelunthik Kalangida
    Vinthaiyaayp Piranthaar


    ஆ அம்பர உம்பர புகழுந்திரு
    ஆதிபன் பிறந்தார்

    ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தார்

    அன்பான பரனே அருள் மேவுங் காரணனே நவ
    அச்சய சச்சித ரட்சகனாகிய
    உச்சிதவரனே

    ஆதம் பவமற நீதம் நிறைவேற அன்று
    அல்லிராவினில் தொல்லையிடையினில்
    புல்லணையிற் பிறந்தார்

    ஞானியர் தேட வானவர் பாட மிக
    நன்னய உன்னத பன்னரும் ஏசையா
    இந்நிலம் பிறந்தார்

    கோனவர் நாட தானவர் கொண்டாட என்று
    கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே யூத
    கோத்திரன் பிறந்தார்

    விண்ணுடு தோண மன்னவர் பேண ஏரோது
    மைந்தனின் சிந்தையெழுந்திக் கலங்கிட
    விந்தையாய்ப் பிறந்தார்

    Aa Ambara Umbara - ஆ அம்பர உம்பர Aa Ambara Umbara - ஆ அம்பர உம்பர Reviewed by Christking on June 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.