Aa Ambara Umbaramum Pugalnthiru - ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு - Christking - Lyrics

    Aa Ambara Umbaramum Pugalnthiru - ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு


    Aa! Ampara Umparamum Pukalunthiru
    Aathipan Piranthaar

    Anupallavi

    Aathipan Piranthaar – Amalaathipan Piranthaar

    Saranangal

    1. Anpaana Paranae! – Arul Maevung Kaarananae! – Nava
    Achchaya Sachchitha – Ratchakanaakiya
    Uchchithavaranae! — Aa! Ampara

    2. Aatham Pavamara, – Neetham Niraivaera, – Antu
    Alliraavinil – Thollaiyitaiyinil
    Pullannaiyir Piranthaar. — Aa! Ampara

    3. Njaaniyar Thaeda , – Vaanavar Paada , -mika
    Nannaya , Unnatha – Pannarum Aesaiyaa
    Innilam Piranthaar. — Aa! Ampara

    4. Konavar Naada , – Thaanavaa Konndaada – Entu
    Koththirar Thoththiranj Saattida Vae , Yootha
    Koththiran Piranthaar. — Aa! Ampara

    5. Vinnnudu Thona , – Mannavar Paena , – Aerothu
    Mainthanin Sinthaiyalunthik Kalangida
    Vinthaiyaayp Piranthaar. — Aa! Ampara


    ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
    ஆதிபன் பிறந்தார்

    அனுபல்லவி

    ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார்

    சரணங்கள்

    1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! – நவ
    அச்சய சச்சித – ரட்சகனாகிய
    உச்சிதவரனே! — ஆ! அம்பர

    2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, – அன்று
    அல்லிராவினில் – தொல்லையிடையினில்
    புல்லணையிற் பிறந்தார். — ஆ! அம்பர

    3. ஞானியர் தேட , – வானவர் பாட , -மிக
    நன்னய , உன்னத – பன்னரும் ஏசையா
    இந்நிலம் பிறந்தார். — ஆ! அம்பர

    4. கோனவர் நாட , – தானவா கொண்டாட – என்று
    கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
    கோத்திரன் பிறந்தார். — ஆ! அம்பர

    5. விண்ணுடு தோண , – மன்னவர் பேண , – ஏரோது
    மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
    விந்தையாய்ப் பிறந்தார். — ஆ! அம்பர

    Aa Ambara Umbaramum Pugalnthiru - ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு Aa Ambara Umbaramum Pugalnthiru - ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு Reviewed by Christking on June 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.