Buthiyaai Nadandhu Vaarungal - புத்தியாய் நடந்து வாருங்கள் - Christking - Lyrics

Buthiyaai Nadandhu Vaarungal - புத்தியாய் நடந்து வாருங்கள்


பல்லவி

புத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்

அனுபல்லவி

சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம்,
நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி

சரணங்கள்

1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ
சீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்த
தித்தரிப்பு செய்யும் வகைகள்?
கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே –

2. ஆவியை அடக்காதிருங்கள்;ளூ – மறை சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்ளூ
ஜீவனை அடையத் தேடுங்கள்ளூ – யேசுக் கிறிஸ்தின்
சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்ளூ
மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு
தாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் –

3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் – துதித்துப் போற்றி,
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் – பிடித்துளத்தில்
வைத்துக் கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பிழைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் –

4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? – நீங்கள் எல்லாரும்
பரன் மகன் தேட்டம் அல்லவோ?
தரிசிக்க நாட்டம் அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
புரிசனை செய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னிக்
கரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் –


Pallavi

Puththiyaay Nadanthu Vaarungal – Thiruvasanap
Poottath Thiranthu Paarungal

Anupallavi

Saththiyaththaip Pattikkonndu,
Thannaich Suththi Pannnnikkonndu,
Niththamum Jepam, Tharumam,
Neethi Seythu, Paatikkonndu – Puththi

Saranangal

1. Aarutaiya Pillaikal Neengal? - Thiru Uraiyil
Arinthu Unarnthu Paarungalloo
Seerutaiya Theyvap Pillaikal – Neengalloo Aethiththa
Thiththarippu Seyyum Vakaikal?
Koorudan Meyth Thirumarai Kuriththuch Solvathaith Thinam
Naerudan Aaraaynthu Paarththu Niththiya Oliyil Thaanae -

2. Aaviyai Adakkaathirungal;loo – Marai Solluvathai
Asatta Seyyaamal Paarungalloo
Jeevanai Ataiyath Thaedungalloo – Yaesuk Kiristhin
Sinthaiyaith Thariththuk Kollungalloo
Maeviyae Jepam, Mantattu, Vinnnappam, Vaennduthalodu
Thaavi, Yaesuvaip Pitiththuth Thalaraa Nataiyodunnip –

3. Aesuk Kiristhaiyan Pathaththaith – Thuthiththup Potti,
Inpamaaych Saththiya Vaethaththai
Vaasiththu Aaraaynthu, Nalaththaip – Pitiththulaththil
Vaiththuk Konndu, Ivvulakaththai
Naesiyaamal Pilaiththungal Niththiya Ratchippaith Thinam
Aasaiyodu Thaeti, Neengal Ataiyumpati Muttilum –

4. Parisuththa Koottam Allavo? – Neengal Ellaarum
Paran Makan Thaettam Allavo?
Tharisikka Naattam Allavo? - Kiristhin Ullam
Thannilae Konndaattam Allavo?
Purisanai Seythavarporpaathaththai Manathil Unnik
Karisanai Yodu Thaetik Kaanath Theeyon Naanap Patip –

Buthiyaai Nadandhu Vaarungal - புத்தியாய் நடந்து வாருங்கள் Buthiyaai Nadandhu Vaarungal - புத்தியாய் நடந்து வாருங்கள் Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.