Deivanbin Vellame Thiru Arul - தெய்வன்பின் வெள்ளமே திருவருள் - Christking - Lyrics

    Deivanbin Vellame Thiru Arul - தெய்வன்பின் வெள்ளமே திருவருள்


    தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
    மெய்ம் மனதானந்தமே!
    செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
    அய்யா நின் அடி பணிந்தேன்.

    சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
    எந்தாய் துணிவேனோ யான்?
    புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
    பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.

    பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
    தேவே தவறிடினும்,
    கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய்
    யாவும் பொறுத்த நாதா!

    மூர்க்குணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
    மோக ஏக்கம் யாவும்
    தாக்கிடத் தடுமாறித் தயங்கிடும் வேளையில்,
    தூக்கித் தற்காத்தருள்வாய்.

    ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
    பூசைப் பீடம் படைப்பேன்;
    மோச வழிதனை முற்று மகற்றியென்.
    நேசனே நினைத் தொழுவேன்.

    மரணமோ ஜீவனோ மறுமையோ பூமியோ
    மகிமையோ வருங்காலமோ,
    பிற சிருஷ்டியோ உயர்ந்ததோ தாழ்ந்ததோ
    பிரித்திடுமோ தெய்வன்பை


    Deivanbin Vellamae, Thiruvarul Thottamae,
    Meym Manathaananthamae!
    Seyya Ninsempaatham Sevikka Iv Vaelai
    Ayyaa Nin Ati Panninthaen.

    Sontham Unathallaal Sora Vali Sella
    Enthaay Thunnivaeno Yaan?
    Punthikkamalamaam Poomaalai Korththu Nin
    Porpatham Pitiththuk Kolvaen.

    Paavach Settil Palavaelai Palamintith
    Thaevae Thavaritinum,
    Koovi Viliththun Than Maarpodannaith Thanpaay
    Yaavum Poruththa Naathaa!

    Moorkkunam Kopam Lokam Sittinpamum
    Moka Aekkam Yaavum
    Thaakkidath Thadumaarith Thayangidum Vaelaiyil,
    Thookkith Tharkaaththarulvaay.

    Aasai Paasam Pattu Aavalaay Ninthirup
    Poosaip Peedam Pataippaen;
    Mosa Valithanai Muttu Makattiyen.
    Naesanae Ninaith Tholuvaen.

    Maranamo Jeevano Marumaiyo Poomiyo
    Makimaiyo Varungaalamo,
    Pira Sirushtiyo Uyarnthatho Thaalnthatho
    Piriththidumo Theyvanpai

    Deivanbin Vellame Thiru Arul - தெய்வன்பின் வெள்ளமே திருவருள் Deivanbin Vellame Thiru Arul - தெய்வன்பின் வெள்ளமே திருவருள் Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.