Deva Sitham Niraivera - தேவ சித்தம் நிறைவேற - Christking - Lyrics

Deva Sitham Niraivera - தேவ சித்தம் நிறைவேற


தேவ சித்தம் நிறைவேற
எனையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம்
பலமாக தொனிக்குதே

முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையும் தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்கிடுவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலனளிப்பார்

அத்திமரம் துளிர் விடாமல்
ஆஸ்திகளெல்லாம் அழிந்து நஷ்டம் வந்தாலும்
கர்த்தருக்குள் சந்தோஷமாய்
நித்தமும் மகிழ்ந்திடுவேன்

நீதிமானை அனுதினமும்
சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்
கர்த்தர் அன்பை விட்டு நீங்கா
சுத்தனாய் நிலைத்திருப்பேன்

முன்னறிந்து அழைத்தவரே
முன்னறிந்து நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்

சோதனையை சகிப்பவனே
சாந்தமும் பொறுமையுமுள்ளவனே
ஜீவ கிரீடம் பெற்றிடுவான்
ஜோதியாய் பிரகாசிப்பான்

கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார்


Dheva Siththam Niraivaera
Enaiyum Oppataikkiraen
Thaeva Saththam Ennullam
Palamaaka Thonikkuthae

Mutkalukkul Malarkintathor
Makkalaik Kavarum Leeli Pushpam Pol
Ennaiyum Tham Saayalaay
Ententum Uruvaakkuvaar

Ponnaip Pola Pudamittalum
Ponnaaka Vilangiduvaen Ententumae
Thiraannikku Mael Sothiththidaar
Thaangida Pelanalippaar

Aththimaram Thulir Vidaamal
Aasthikalellaam Alinthu Nashdam Vanthaalum
Karththarukkul Santhoshamaay
Niththamum Makilnthiduvaen

Neethimaanai Anuthinamum
Sothikka Palvaetru Thunpam Vanthum
Karththar Anpai Vittu Neengaa
Suththanaay Nilaiththiruppaen

Munnarinthu Alaiththavarae
Munnarinthu Nalamudan Nadaththuvaar
Sakalamum Nanmaikkente
Saatchiyaay Mutiththiduvaar

Sothanaiyai Sakippavanae
Saanthamum Porumaiyumullavanae
Jeeva Kireedam Pettiduvaan
Jothiyaay Pirakaasippaan

Kashdamellaam Tholaiyum or Naal
Kannnneerum Kavalaiyum Neengum Annaal
Irattippaana Pangaip Pera
Iratchakar Alaiththiduvaar

Deva Sitham Niraivera - தேவ சித்தம் நிறைவேற Deva Sitham Niraivera - தேவ சித்தம் நிறைவேற Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.