Devanbibn Vellamae – தெய்வன்பின் வெள்ளமே - Christking - Lyrics

Devanbibn Vellamae – தெய்வன்பின் வெள்ளமே


1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
மெய்ம் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
அய்யா, நின் அடி பணிந்தேன்.

2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.

3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப்
பாதையை தவறிடினும்,
கூவி விளித்தம் தன் மார்போடணைத்தன்பாய்
கோது பொறுத்த நாதா!

4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கமானதைத்
தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தற்பரா! தற்காத்தருள்வாய்.

5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப்பீடம் படைப்பேன்!
மோச வழிதனை முற்றும் அகற்றி என்
நேசனே நினைத் தொழுவேன்.

6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
மகிமையோ, வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
பிரித்திடுமோ தெய்வன்பை?


1. theyvanpin vellamae, thiruvarul thottamae,
meym manathaananthamae!
seyya ninsempaatham sevikka iv vaelai
ayyaa, nin ati panninthaen.

2. sontham unathallaal sora vali sella
enthaay thunnivaeno yaan?
punthikkamalamaam poomaalai korththu nin
porpatham pitiththuk kolvaen.

3. paavach settil palavaelai palamintip
paathaiyai thavaritinum,
koovi viliththam than maarpodannaiththanpaay
kothu poruththa naathaa!

4. moorkkakunam kopam lokam sittinpamum
moka aekkamaanathaith
thaakkiyaan thadumaarith thayangidum vaelaiyil
tharparaa! tharkaaththarulvaay.

5. aasai paasam pattu aavalaay ninthirup
poosaippeedam pataippaen!
mosa valithanai muttum akatti en
naesanae ninaith tholuvaen.

6. maranamo, jeevano, marumaiyo, poomiyo,
makimaiyo, varungaalamo,
pira sirushtiyo, uyarnthatho, thaalnthatho,
piriththidumo theyvanpai?

Devanbibn Vellamae – தெய்வன்பின் வெள்ளமே Devanbibn Vellamae – தெய்வன்பின் வெள்ளமே Reviewed by Christking on June 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.