Unthan Muham - உந்தன் முகம் | Rev.Lendsey Jones - Christking - Lyrics

    Unthan Muham - உந்தன் முகம் | Rev.Lendsey Jones



    உந்தன் முகம் பார்த்தேன்
    எந்தன் அகம் மறந்தேன்
    வாழ்வின் சுகம் துறந்தேன்
    உந்தன் நுகம் சுமந்தேன்

    வாழ்வேன் உமக்காகவே
    உயிர் வாழும் நாட்களெல்லாம்
    செய்வேன் உம் சித்தமே
    என் ஜீவ காலமெல்லாம்

    உருத்தெரியாமல் மங்கிடும் நேரம்
    உம் முகம் காட்டி
    உம்மை போல் மாற்றி
    உமதன்பை ஊற்றி
    உரிமை சொத்தாக்கி
    உன் மனம் தந்தீரே
    வழியறியாமல் திகைத்திடும் நேரம்
    உம் ஒளி காட்டி
    இருளை நீக்கி
    நேர்வழியாக்கி, நடை ஸ்திரப்படுத்தி
    உம் பாதை தந்தீரே

    ஒன்றுமில்லாமல் உடைந்திட்ட நேரம்
    உம் ஆவி ஊற்றி,
    வெறுமையை மாற்றி
    என் வாழ்வைத் தேற்றி
    சகலமும் ஆற்றி
    உம் முற்றும் தந்தீரே


    English


    Unthan Muham - உந்தன் முகம் | Rev.Lendsey Jones Unthan Muham - உந்தன் முகம் | Rev.Lendsey Jones Reviewed by Christking on June 30, 2020 Rating: 5
    Powered by Blogger.