Aa Yesuve Ummale Naan - ஆ இயேசுவே உம்மாலே - Christking - Lyrics

    Aa Yesuve Ummale Naan - ஆ இயேசுவே உம்மாலே


    1. ஆ இயேசுவே, உம்மாலே
    நான் மீட்கப்பட்டவன்
    உம் திவ்விய ரத்தத்தாலே
    நான் சுத்தமானவன்
    மிகுந்த கஸ்தியாலே
    என் தோஷத்தைத் தீர்த்தீர்
    உமது சாவினாலே
    நீர் என்னை ரட்சித்தீர்.

    2. நான் உம்மால் என்றும் வாழ
    இப்பந்தியில் நீரே
    என் ஆவிக் கேற்றதான
    அமிர்தம் தந்தீரே
    உம் ஆசீர்வாதம் ஈந்து
    என் பாவம் மன்னியும்
    அன்போடு என்னைச் சேர்த்து
    தயாளம் காண்பியும்.

    3. நீர் இன்னும் என்னில் காணும்
    பொல்லாங்கு யாவையும்
    அகற்றிப்போட வாரும்
    என் நெஞ்சில் தங்கிடும்
    நான் உம்மைப் பற்றிக் கொள்ள
    கருணை புரியும்
    மிகுந்த தாழ்மையுள்ள
    சித்தம் கடாஷியும்.

    4. நல் மீட்பரே, உம்மோடு
    நான் ஐக்கியமாகவும்
    நாடோறும் வாஞ்சையோடு
    உம்மில் நிலைக்கவும்
    மிகுந்த அன்பினாலே
    துணை செய்தருளும்
    தெய்வீக அப்பத்தாலே
    நீர் என்னைப் போஷியும்.


    1. Aa Yesuvae, Ummaalae
    Naan Meetkappattavan
    Um Thivviya Raththaththaalae
    Naan Suththamaanavan
    Mikuntha Kasthiyaalae
    En Thoshaththaith Theerththeer
    Umathu Saavinaalae
    Neer Ennai Ratchiththeer.

    2. Naan Ummaal Entum Vaala
    Ippanthiyil Neerae
    En Aavik Kaettathaana
    Amirtham Thantheerae
    Um Aaseervaatham Eenthu
    En Paavam Manniyum
    Anpodu Ennaich Serththu
    Thayaalam Kaannpiyum.

    3. Neer Innum Ennil Kaanum
    Pollaangu Yaavaiyum
    Akattippoda Vaarum
    En Nenjil Thangidum
    Naan Ummaip Pattik Kolla
    Karunnai Puriyum
    Mikuntha Thaalmaiyulla
    Siththam Kadaashiyum.

    4. Nal Meetparae, Ummodu
    Naan Aikkiyamaakavum
    Naatoorum Vaanjaiyodu
    Ummil Nilaikkavum
    Mikuntha Anpinaalae
    Thunnai Seytharulum
    Theyveeka Appaththaalae
    Neer Ennaip Poshiyum.

    Aa Yesuve Ummale Naan - ஆ இயேசுவே உம்மாலே Aa Yesuve Ummale Naan - ஆ இயேசுவே உம்மாலே Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.