Aamen Allaelooyaa ! - ஆமென் அல்லேலூயா ! - Christking - Lyrics

    Aamen Allaelooyaa ! - ஆமென் அல்லேலூயா !


    ஆமென் , அல்லேலூயா ! மகத்துவத் தம்பராபரா
    ஆமென் , அல்லேலூயா! ஜெயம் ! ஜெயம் ! அனந்த தோத்திரா

    ஓம் அனாதி தந்தார் , வந்தார் , இறந்
    துயிர்த்தெழுந்தாரே , உன்னதமே –

    1. வெற்றிகொண் டார்ப்பரித்து – கொடும்வே
    தானத்தைச் சங்கரித்து – முறித்து
    பத்ராசனக கிறிஸ்து – மரித்து
    பாடுபட்டுத் தரித்து , முடித்தார்
    — ஆமென்

    2. சாவின் கூர் ஒடிந்து , மடிந்து
    தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
    ஜீவனே விடிந்து – தேவாலயத்
    திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது
    — ஆமென்

    3. வேதம் நிறைவேற்றி – மெய்தோற்றி
    மீட்டுக் கரையேற்றி – பொய்மாற்றி
    பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
    பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
    — ஆமென்


    Aamen , Allaelooyaa ! Makaththuvath Thamparaaparaa
    Aamen , Allaelooyaa! Jeyam ! Jeyam ! Anantha Thoththiraa

    Om Anaathi Thanthaar , Vanthaar , Iran
    Thuyirththelunthaarae , Unnathamae –

    1. Vettikonn Daarppariththu – Kodumvae
    Thaanaththaich Sangariththu – Muriththu
    Pathraasanaka Kiristhu – Mariththu
    Paadupattuth Thariththu , Mutiththaar
    — Aamen

    2. Saavin Koor Otinthu , Matinthu
    Thaduppuch Suvar Itinthu – Vilunthu
    Jeevanae Vitinthu – Thaevaalayath
    Thirai Ranndaayk Kilinthu Olinthathu
    — Aamen

    3. Vaetham Niraivaetti – Meythotti
    Meettuk Karaiyaetti – Poymaatti
    Paavikalaith Thaetti – Konndaatti
    Pathraasanath Thaetti Vaalviththaar
    — Aamen

    Aamen Allaelooyaa ! - ஆமென் அல்லேலூயா ! Aamen Allaelooyaa ! - ஆமென் அல்லேலூயா ! Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.