Aanandhamai Inba Kaanan - ஆனந்தமாய் இன்பக் கானான் - Christking - Lyrics

    Aanandhamai Inba Kaanan - ஆனந்தமாய் இன்பக் கானான்


    ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
    தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
    நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
    நாதன் இயேசு என்னோடிருப்பார்

    1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
    மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
    கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
    கண்டு நன்றியுடன் பாடிடுவேன்

    2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
    வாஞ்சையுடன் என்னைத்தேடி வந்தார்
    எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
    இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்?

    3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
    தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
    இயேசு அல்லால் ஆசை இப்ப+வில் வேறே இல்லை
    என்றும் எனக்கவர் ஆதரவே

    4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
    உம் பாதம் சேர்த்திட வாஞ்சிக்கிறேன்
    தாரும் தேவா ஏழைக்கு மாறாத உம் கிருபை
    கண்பாரும் என்றும் நான் உம் அடிமை

    5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
    ஆற்றிடுதே உந்தன் சமூகமே
    பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
    பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன


    Aananthamaay Inpak Kaanaan Aekiduvaen
    Thooya Pithaavin Mukam Tharisippaen
    Naalukku Naal Arputhamaay Ennaith Thaangidum
    Naathan Yesu Ennotiruppaar

    1. Settinintennaith Thookkiyeduththu
    Maatti Ullam Puthithaakkinaarae
    Kallaana en Ullam Urukkina Kalvaariyai
    Kanndu Nantiyudan Paadiduvaen

    2. Vaalipa Naalil Yesuvaik Kanntaen
    Vaanjaiyudan Ennaiththaeti Vanthaar
    Etharkumae Uthavaa Ennaiyum Kanndeduththaar
    Yesuvin Anpai Naan en Solluvaen?

    3. Karththarin Siththam Seythida Niththam
    Thaththam Seythae Ennai Arppanniththaen
    Yesu Allaal Aasai Ippa+vil Vaetae Illai
    Entum Enakkavar Aatharavae

    4. Ummaip Pin Sentu Ooliyam Seythu
    Um Paatham Serththida Vaanjikkiraen
    Thaarum Thaevaa Aelaikku Maaraatha Um Kirupai
    Kannpaarum Entum Naan Um Atimai

    5. Thaettiduthae Um Vaakkukal Ennai
    Aattiduthae Unthan Samookamae
    Pelaththin Mael Pelanatainthu Naan Seruvaen
    Paerinpa Seeyonil Vaalnthiduvaena

    Aanandhamai Inba Kaanan - ஆனந்தமாய் இன்பக் கானான் Aanandhamai Inba Kaanan - ஆனந்தமாய் இன்பக் கானான் Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.