Aanantha Thuthi Oli Kaetkum - ஆனந்த துதி ஒலி கேட்கும் - Christking - Lyrics

    Aanantha Thuthi Oli Kaetkum - ஆனந்த துதி ஒலி கேட்கும்


    ஆனந்த துதி ஒலி கேட்கும்
    ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
    ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
    ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ…

    1. மகிமைப்படுத்து வேனென்றாரே
    மகிபனின் பாசம் பெரிதே
    மங்காத புகழுடன் வாழ்வோம்
    மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
    குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
    கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ…

    2. ஆதி நிலை எகுவோமே
    ஆசீர் திரும்பப் பெறுவோம்
    பாழான மண்மேடுகள் யாவும்
    பாராளும் வேந்தன் மனையாகும்
    சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
    சீயோனின் மகிமை திரும்பும் — ஆ… ஆ…

    3. விடுதலை முழங்கிடுவோமே
    விக்கினம் யாவும் அகலும்
    இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
    இரட்சகன் மீட்பருள்வாரே
    நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
    விடுதலை பெருவிழா காண்போம் — ஆ… ஆ…

    4. யாக்கோபு நடுங்கிடுவானோ
    யாக்கோபின் தேவன் துணையே
    அமரிக்கை வாழ்வை அழைப்போம்
    ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
    பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
    பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ…


    Aanantha Thuthi Oli Kaetkum
    Aadal Paadal Saththamum Thonikkum
    Aakaaya Vinnmeenaay Avar Janam Perukum
    Aanndavar Vaakku Palikkum — Aa… Aa…

    1. Makimaippaduththu Vaenentarae
    Makipanin Paasam Perithae
    Mangaatha Pukaludan Vaalvom
    Maatchi Pettuyarnthiduvomae
    Kurukida Maattam Kuntida Maattam
    Karaiyillaa Thaevanin Vaakku — Aa… Aa…

    2. Aathi Nilai Ekuvomae
    Aaseer Thirumpap Peruvom
    Paalaana Mannmaedukal Yaavum
    Paaraalum Vaenthan Manaiyaakum
    Sirai Vaalvu Maraiyum Seer Vaalvu Malarum
    Seeyonin Makimai Thirumpum — Aa… Aa…

    3. Viduthalai Mulangiduvomae
    Vikkinam Yaavum Akalum
    Idukkannkal Soolnthidum Vaelai
    Iratchakan Meetparulvaarae
    Nukangal Murinthidum Kattukal Arunthidum
    Viduthalai Peruvilaa Kaannpom — Aa… Aa…

    4. Yaakkopu Nadungiduvaano
    Yaakkopin Thaevan Thunnaiyae
    Amarikkai Vaalvai Alaippom
    Aanndavar Maarpil Sukippom
    Patharaatha Vaalvum Sitharaatha Manamum
    Parisaaka Thaevanarulvaar — Aa… Aa…

    Aanantha Thuthi Oli Kaetkum - ஆனந்த துதி ஒலி கேட்கும் Aanantha Thuthi Oli Kaetkum - ஆனந்த துதி ஒலி கேட்கும் Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.