Aannikal Paayntha Karangalai - ஆணிகள் பாய்ந்த கரங்களை - Christking - Lyrics

    Aannikal Paayntha Karangalai - ஆணிகள் பாய்ந்த கரங்களை


    ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
    ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே

    1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
    பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
    பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
    பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள்

    2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
    நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
    உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
    சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள்

    3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
    மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
    உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
    கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள்

    4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
    பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
    மறுரூப நாளின் அச்சாரமதுவே
    மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள்

    5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
    இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
    அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
    அவரே உன் நாயகரே — ஆணிகள்


    Aannikal Paayntha Karangalai Viriththae
    Aavalaay Iyesunnai Alaikkiraarae

    1. Paar ! Thirumaeni Vaaratiyaettavar
    Paarach Siluvaithanaich Sumanthu Sentanarae
    Paavamum Saapamum Sumanthaarae Unakkaay
    Payaminti Vanthiduvaay — Aannikal

    2. Mayakkidumo Innum Maayaiyin Inpam
    Nayaththaalae Unthanai Naasamaakkidumae
    Unarnthithaiyudanae Unnathananntai
    Sarannpukuvaay Iththarunam — Aannikal

    3. Kirupaiyin Vaasal Ataiththidu Munnae
    Maranaththin Saayalil Innainthiduvaayae
    Uruvaakkiyae Puthu Sirushtiyil Valara
    Kirupaiyum Aliththiduvaar — Aannikal

    4. Parisuththa Aaviyaal Paramanin Anpinaip
    Pakarnthiduvaar Unthan Iruthayanthanilae
    Maruroopa Naalin Achcharamathuvae
    Makimaiyum Atainthiduvaay — Aannikal

    5. Yesuvallaathu Iratchipputh Tharuvor
    Iratchakar Vaetru Ikamathilunntoo
    Avar Vali Saththiyam Jeevanumaamae
    Avarae Un Naayakarae — Aannikal

    Aannikal Paayntha Karangalai - ஆணிகள் பாய்ந்த கரங்களை Aannikal Paayntha Karangalai - ஆணிகள் பாய்ந்த கரங்களை Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
    Powered by Blogger.