Aaraaynthu Paarum Karththarae - ஆராய்ந்து பாரும் கர்த்தரே - Christking - Lyrics

    Aaraaynthu Paarum Karththarae - ஆராய்ந்து பாரும் கர்த்தரே


    1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே
    என் செய்கை யாவையும்
    நீர் காணுமாறு காணவே
    என்னில் பிரகாசியும்

    2. ஆராயும் என்தன் உள்ளத்தை
    நீர் சோதித்தறிவீர்!
    என் அந்தரங்க பாவத்தை
    மா தெளிவாக்குவீர்

    3. ஆராயும் சுடரொளியால்
    தூராசை தோன்றவும்
    மெய் மனஸ்தாபம் அதனால்
    உண்டாக்கியருளும்

    4. ஆராயும் சிந்தை, யோசனை
    எவ்வகை நோக்கமும்
    அசுத்த மனோபாவனை
    உள்ளிந்திரியங்களும்

    5. ஆராயும் மறைவிடத்தை
    உம் தூயக் கண்ணினால்
    அரோசிப்பேன் என் பாவத்தை
    உம பேரருளினால்

    6. இவ்வாறு நீர் ஆராய்கையில்
    சாஷ்டாங்கம் பண்ணுவேன்
    உம் சரணார விந்தத்தில்
    பணிந்து போற்றுவேன்


    1. Aaraaynthu Paarum, Karththarae
    En Seykai Yaavaiyum
    Neer Kaanumaatru Kaanavae
    Ennil Pirakaasiyum

    2. Aaraayum Enthan Ullaththai
    Neer Sothiththariveer!
    En Antharanga Paavaththai
    Maa Thelivaakkuveer

    3. Aaraayum Sudaroliyaal
    Thooraasai Thontavum
    Mey Manasthaapam Athanaal
    Unndaakkiyarulum

    4. Aaraayum Sinthai, Yosanai
    Evvakai Nnokkamum
    Asuththa Manopaavanai
    Ullinthiriyangalum

    5. Aaraayum Maraividaththai
    Um Thooyak Kannnninaal
    Arosippaen en Paavaththai
    Uma Paerarulinaal

    6. Ivvaatru Neer Aaraaykaiyil
    Saashdaangam Pannnuvaen
    Um Sarannaara Vinthaththil
    Panninthu Pottuvaen

    Aaraaynthu Paarum Karththarae - ஆராய்ந்து பாரும் கர்த்தரே Aaraaynthu Paarum Karththarae - ஆராய்ந்து பாரும் கர்த்தரே Reviewed by Christking on July 06, 2020 Rating: 5
    Powered by Blogger.