Aassiyame Athisayame - ஆச்சரியமே அதிசயமே - Christking - Lyrics

    Aassiyame Athisayame - ஆச்சரியமே அதிசயமே


    ஆச்சரியமே அதிசயமே
    ஆண்டவர் செயல்கள் அதி பக்தரிடம்

    செங்கடல் இரண்டாய் பிரிந்து போக
    சொந்த ஜனங்களைக் கடத்தினாரே
    இஸ்ரவேலின் துதிகளாலே
    ஈன எரிகோ வீழ்ந்ததுவே

    ஏழு மடங்கு எரி நெருப்பில்
    ஏழை தம் தாசருடன் நடந்தார்
    தானியேலை சிங்க கெபியில்
    தூதன் துணையால் காத்தனரே

    பனிமழையை நிறுத்தினாரே
    பக்தன் எலியா தன் வாக்கினாலே
    யோசுவாவின் வார்த்தையாலே
    ஏகும் சூரியன் நின்றதுவே

    மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்
    மாபெலன் தேவனிடம் அடைந்தான்
    வீழ்த்தினானே கோலியாத்தை
    வீரன் தாவீது கல்லெறிந்தே

    நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
    தம்மை நோக்கி வேண்டும் போதும்
    தாங்கி நம்மை ஆதரிப்பார்


    Aachchariyamae Athisayamae
    Aanndavar Seyalkal Athi Paktharidam

    Sengadal Iranndaay Pirinthu Poka
    Sontha Janangalaik Kadaththinaarae
    Isravaelin Thuthikalaalae
    Eena Eriko Veelnthathuvae

    Aelu Madangu Eri Neruppil
    Aelai Tham Thaasarudan Nadanthaar
    Thaaniyaelai Singa Kepiyil
    Thoothan Thunnaiyaal Kaaththanarae

    Panimalaiyai Niruththinaarae
    Pakthan Eliyaa Than Vaakkinaalae
    Yosuvaavin Vaarththaiyaalae
    Aekum Sooriyan Nintathuvae

    Mathilaith Thaannti Senaikkul Paayum
    Maapelan Thaevanidam Atainthaan
    Veelththinaanae Koliyaaththai
    Veeran Thaaveethu Kallerinthae

    Nam Murpithaakkal Nampina Thaevan
    Naettum Intum Entum Maaridaarae
    Thammai Nnokki Vaenndum Pothum
    Thaangi Nammai Aatharippaar

    Aassiyame Athisayame - ஆச்சரியமே அதிசயமே Aassiyame Athisayame - ஆச்சரியமே அதிசயமே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.