Adhikaalaiyelumai Theduven Mulu - அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு

    Adhikaalaiyelumai Theduven Mulu - அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு


    பல்லவி

    அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
    தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

    அனுபல்லவி

    இதுகாறும் காத்த தந்தை நீரே;
    இனிமேலும் காத்தருள் செய்வீரே,
    பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
    பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே!
    — அதிகாலை

    சரணங்கள்

    1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
    எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
    ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
    எனக்கான ஈசனே! வான ராசனே!
    இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா!
    — அதிகாலை

    2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
    தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
    விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
    விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
    விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது?
    — அதிகாலை

    3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
    தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
    பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
    புகழார நாதனே! வேத போதனே!
    பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே!
    — அதிகாலை


    Pallavi

    Athikaalaiyilumaith Thaeduvaen Mulu Manathaalae
    Thaevaaseer Vaatham Pera Naaduvaen Jepa Thapaththaalae

    Anupallavi

    Ithukaarum Kaaththa Thanthai Neerae;
    Inimaelum Kaaththarul Seyveerae,
    Pathivaaka Ummilae Naan Nilaikkavae,
    Paththiramaay Enai Uththamanaakkidum , Thaevae!
    — Athikaalai

    Saranangal

    1. Ponaraamuluvathum Paathukaaththarulina Pothaa!
    Eppothum Engaludaniruppathaay Uraiththa Nal Naathaa!
    Eenappaavik Kaethuthunnai Lokilunndu Porpaathaa?
    Enakkaana Eesanae! Vaana Raasanae!
    Intha Naalilum Oru Panthamillaamal Kaarum Neethaa!
    — Athikaalai

    2. Palasothanaikalaal Soolnthunaan Kalangidumpothu
    Thappaathu Ninkirupai Thaangida Vaenum Appothu,
    Vilakaathu Ensamookam Enta Vaakkil Thavaraethu?
    Visuvaasang Konndu Meyp Paasamoonntida
    Vikkinam Yaavilum Vetti Kaanuvaen Malaivaethu?
    — Athikaalai

    3. Nararyaavarkkumutta Nannpanaay Nadanthida Vaiyae!
    Theenaavin Paavamara Nanmaikal Molinthidach Seyyae!
    Paraloka Aaviyainal Maari Polenilae Peyyae!
    Pukalaara Naathanae! Vaetha Pothanae!
    Pooranamaay Unaip Pottuvaen, Thinan Thinam Meyyae!
    — Athikaalai

    Adhikaalaiyelumai Theduven Mulu - அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு Adhikaalaiyelumai Theduven Mulu - அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.